Monday, May 29, 2023
HomeLifestyleவாட்டி வதைக்கும் வெயில்..! வீடு எப்போதும் கூலிங்கா இருக்க என்ன செய்யனும்?

வாட்டி வதைக்கும் வெயில்..! வீடு எப்போதும் கூலிங்கா இருக்க என்ன செய்யனும்?

கோடை வெயில் கொளுத்துகிறது. வேலை, அன்றாட தேவைகளுக்காக வெளியில் செல்லாமல் இருக்க முடியாது. வெயிலில் எங்கே சுற்றினாலும் வீட்டிற்கு எப்போது வருவோம் என்றே மனம் ஏங்கும். அவ்வாறு வெயிலில் வியர்த்து விறுவிறுத்து வீடு திரும்பும்போது வீட்டிலும் வெப்பம் வாட்டி வதைத்தால் என்ன செய்வது?
அவ்வாறு வெப்பம் வீட்டில் இல்லாமல் வீடு குளிர்ச்சியாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

  •  காற்றை வெளியேற்றும் மின்விசிறியை, வீட்டின் சமையல் அறை மற்றும் படுக்கை அறையில் பொருத்த வேண்டும். இவை வீட்டில் உள்ள வெப்ப காற்றை வெளியேற்றி, அறையை குளிர்ச்சியாக்கும்.
  • காலை, மாலை என இரு வேளையும் வீட்டை தண்ணீரால் துடைக்க வேண்டும். இதனால் வீடு குளிர்ச்சியாக இருக்கும்.
  • பகல் நேரத்தில் வீட்டில் தேவையில்லாமல் மின் விளக்குகள் போடுவதை தவிர்க்க வேண்டும்.
  • படுக்கை அறை குளிர்ச்சியுடன் இருக்க வேண்டும் என நினைத்தால், இரவில் படுக்கும்போது மின்விசிறியின் முன் ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும். இதனால் வெப்பம் குறைந்து அறை குளிர்ச்சியுடன் இருக்கும்.
  • வீட்டிற்குள் காற்று வர வேண்டும் என்பதற்காக திரைச்சீலையை நீக்கிவிட்டு கதவை திறந்து வைக்க வேண்டாம். இதனால் வீட்டில் அனல் காற்று தான் அதிகரிக்கும்.
  • அதற்கு பதிலாக, வீட்டினுள் அனல் காற்று நுழையாதவாறு சற்று வெளிர் நிற காட்டன் திரைச்சீலையை பயன்படுத்தலாம்.
  • மாலை மற்றும் இரவு வேளைகளில் ஜன்னலை திறந்து வைக்க வேண்டும். இதனால் வீட்டினுள் காற்றோட்டம் அதிகரித்து, வீடு குளிர்ச்சியுடன் இருக்கும். அதே நேரம் கொசுக்கள் மற்றும் பூச்சிகள் உள்ளே நுழையாதவாறு கவனத்துடன் இருக்க வேண்டும்.
  • கோடையில் நம் வீட்டை குளிர்ச்சியுடன் வைத்து கொண்டால் மட்டும் போதாது.
  • நம் உடலையும் குளிர்ச்சியுடன் வைத்து கொள்ள வேண்டும். அதற்கு தண்ணீர் மற்றும் பழச்சாறுகளை அதிகம் பருகுவதோடு, வெயிலில் சுற்றுவதையும் தவிர்க்க வேண்டும்.
  • தினமும் குளித்துவிட வேண்டும். காலையில் குளிப்பது மட்டுமின்றி பணிமுடிந்து மாலை வீடு திரும்பிய பிறகு குளித்தாலும் உடலுக்கு மிகவும் நல்லது ஆகும்.
    மேலே கூறியவற்றை தொடர்ந்து பின்பற்றினால் வீடு எப்போதும் குளிர்ச்சியுடன் இருக்கும்.

ALSO READ | வெயிலுக்கு சருமம் டல் ஆகுதா..?கவலையை விடுங்க.. இதெல்லாம் சாப்பிடுங்க..!