Wednesday, May 31, 2023
HomeLifestyleகோடை காலத்தில் கண் வறட்சி ஆகுதா..? எப்படி காப்பாற்றிக் கொள்வது?

கோடை காலத்தில் கண் வறட்சி ஆகுதா..? எப்படி காப்பாற்றிக் கொள்வது?

கோடை காலம் வந்துவிட்டாலே நாம் நமது ஆரோக்கியத்தில் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும். அவ்வாறு சந்திக்கும் பிரச்சினைகளில் முக்கிய பிரச்சினை கண் வறட்சி ஆகும். கோடை காலத்தில் கண் வறட்சியை தடுப்பது எப்படி? என்பதை கீழே காணலாம்.

அதிக வெப்பத்தால் நம் உடலில் உள்ள நீர்ச்சத்து அதிகம் உறிஞ்சப்படுகிறது. இதனால் கண்களில் வறட்சித்தன்மையும், எரிச்சலும் ஏற்படுகிறது. மேலும், நாம் அதிகளவில் AC பயன்படுத்தும்போது அதில் இருந்து வரும் குளிர்ச்சியான காற்று நேரடியாக நம் கண்களில் படும்பொழுது கண்களில் வறட்சி மற்றும் எரிச்சல் ஆகியவை உண்டாகும்.

  • கோடையில் கண்களை பாதுகாக்க நாம் அதிகளவு நீர் பருக வேண்டும்.
  • வெயிலில் செல்லும்போது கூலிங் கிளாஸ் அணிந்து கொள்ளவும்.
  • பழங்கள், காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை அதிகளவு உணவில் எடுத்து கொள்ள வேண்டும்.
  • கண் பயிற்சிகள் மேற்கொள்ளுதல், அடிக்கடி கண்களை நீரால் கழுவுதல் வேண்டும்.
  • மாலையில் சிறிது நேரம் வெள்ளரி துண்டுகளை கண்களில் வைத்தல் கொள்ளலாம்.
  • கண்களை பாதுகாக்க ஊட்டச்சத்து மிகவும் அவசியம். ஆகையால் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை உள்ள உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
  • அலுவலகம் செல்லும்போது கேரட், தக்காளி, பழங்கள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை நறுக்கி அலுவலகத்திற்கு எடுத்து சென்று அவ்வப்போது சாப்பிட கண்கள் குளிர்ச்சி அடையும்.
  • தலை சுத்தமாக இல்லையென்றாலும் கண் நோய்கள் வரும். எனவே, கோடைகாலத்தில் வாரத்திற்கு மூன்று நாள் தலைக்கு குளிக்கலாம்.
  • அவ்வப்போது உள்ளங்கைகளை இணைத்து தேய்த்து இளஞ்சூடு பரவிய பின்னர், அதனை கண்களில் ஒத்தி வைத்து எடுங்கள். இது இதமான சூட்டை கண்களுக்கு தரும்.
  • மேற்கூறிய அனைத்தையும் விட கோடைகாலத்தில் தினசரி 6 முதல் 8 மணி நேரம் உறங்க வேண்டும். இவை கண்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.
  • கண்களில் ஏற்படும் மற்ற பார்வை குறைபாடுகளுக்கும், கண்நோய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் அருகில் உள்ள கண் மருத்துவமனையை நாடுவதே சிறந்த வழியாகும்.
  • ஏனெனில் மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை எடுத்து கொள்வதன் மூலம் பக்க விளைவுகளோ அல்லது வேறு பாதிப்புகளோ ஏற்படலாம்.
    மேற்கண்ட முறைகளை கடைபிடித்து கண் வறட்சியில் இருந்து பாதுகாத்து கொள்ளுங்கள்.

ALSO READ | பெற்றோர்களே..! வளரும் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?