இன்றைய மாடர்ன் உலகத்தில் பல அசத்தும் ஆடைகள் வந்து கொண்டே இருக்கிறது. ஆள் பாதி ஆடை பாதி என்று அன்றே பழமொழி சொல்வார்கள். ஆண்களும், பெண்களும் இன்று கண்களை கவரும் வண்ணம் அருமையாக ஆடைகளை அணிகிறார்கள்.
அந்த வகையில் பெரும்பாலான பெண்களின் தேர்வாக இன்று ஜீன்ஸ் மற்றும் லெகின்ஸ் ஆடைகள் உள்ளது. பெண்கள் அணியும் ஜீன்ஸானது சட்டைகள், டாப் என பல உடைகளுக்கும் நன்றாக பொருந்தி விடுகிறது. லெகின்ஸ் ஆடைகளை தேர்வு செய்வதில்தான் கவனமாக இருக்க வேண்டும்.
லெகின்ஸ் விரும்பப்படுவது ஏன்?
- லெகின்ஸ் ஆடையானது முகலாயர் காலத்தில் அறிமுகமானது. இது தற்போது மாற்றம் செய்யப்பட்டு வெல்வெட், லேஸ், டெனிம், லைக்கரா போன்ற துணி வகைகளிலும், பல வண்ணங்களிலும் விற்பனையாகிறது.
- ஆரம்பகால எம்,ஜி.ஆர்., சிவாஜி படங்களில் மன்னர், தளபதி கதாபாத்திரங்களில் வரும் ஆண்கள் அணியும் கால்சட்டையாகத்தான் லெகின்ஸ் இருந்தது. தற்போது, பெண்கள் விரும்பி அணியும் பேன்ட்டாக லெகின்ஸ் மாறியுள்ளது.
- சுடிதாருக்கு கூட பெரும்பாலான பெண்கள் தற்போது லெகின்ஸை பயன்படுத்துகிறார்கள்.
- லெகின்ஸ் நாகரிகமாகவும், அதே சமயம் மாடர்னாகவும் பெண்களை காட்டுவதால் பெண்களின் பிரதான தேர்வாக உள்ளது.
தேர்வு செய்வது எப்படி? - ஒல்லியாகவும், உயரமாகவும் இருப்பவர்கள் முக்கால் நீளமுள்ள லெகின்ஸ் அணியலாம்.
- உயரமாகவும், குண்டாகவும் இருப்பவர்கள் லெகின்ஸ் அணிய வேண்டும் எனில், அவர்களின் இடுப்பு அளவிற்கு ஏற்ப தேர்வு செய்ய வேண்டும்.
- உயரம் குறைவாகவும், குண்டாகவும் இருப்பவர்கள் முழு லெகின்ஸ் அணிந்து முட்டி கால் வரையுள்ள லூசான டாப் அணியலாம்.
- லெகின்ஸ் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மிகவும் இறுக்கமாக இருக்கக்கூடாது.
- அதே நேரத்தில் பெரிய அளவிலான லெகின்ஸானது, இடுப்பில் மிகவும் இறுக்கமாக உட்கார வேண்டும். அப்படி அணிந்தால் தான் நன்றாக இருக்கும்.
கர்ப்ப காலத்தில் அணியலாமா? - கர்ப்ப காலத்தில் ஒருசில நாட்களில் மட்டும் லெகின்ஸ் அணிவதால் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. ஆனால், அது மிகவும் இறுக்கமாக இல்லாமலிருப்பது பாதுகாப்பானது ஆகும்.
- கர்ப்ப காலத்தில் நீண்ட நேரம் லெகின்ஸ் அணிவதால், இடுப்பு பகுதியை சுற்றி வலி ஏற்படலாம். அப்போது உடனடியாக உடை மாற்றி கொள்ள வேண்டும்.
- கர்ப்ப காலத்தில் நீண்ட நேரம் லெகின்ஸ் அணிவதால் கால்களில் தசைப்பிடிப்பு, வெரிகோஸ் வெயின்ஸ் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
- கர்ப்பமாக இருக்கும்போது பெண்கள் மேல் வயிற்றை இறுக்கும்படியான எந்தவொரு உடையும் அணிவது நல்லதல்ல. வயிற்றை இறுக்கி பிடிக்கும்படியான உடைகளை தொடர்ந்து அணியும்போது குறைப்பிரசவத்திற்கான அபாயம் இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.