ஹார்மோன் சமநிலையின்மை ஆண் மற்றும் பெண் என இரு பாலினத்தவருக்கும் ஏற்படக்கூடிய மருத்துவ பிரச்சினை ஆகும். பலருக்கும் ஹார்மோன் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். எனினும், பலர் இதற்கான அறிகுறிகளை சிக்கலான சூழலில் எடுத்துக் கொள்கின்றனர்.
சமயங்களில் சில சூழல்களை ஒருவர் எவ்வாறு எடுத்துக் கொள்கின்றனர் என்பதை சார்ந்து உடலில் மாற்றங்கள் ஏற்படும். இதன் காரணமாக அவசர சூழ்நிலைகளில் மருத்துவரை சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். நம் உடலில் ஹார்மோன் பாதிப்புக்கு நாம் உண்ணும் உணவுகளும் காரணிகளாக அமைகின்றன.
அந்த வகையில் உடலில் ஹார்மோன்களை சீராக வைத்துக் கொள்ள வழி செய்யும் வீட்டு உணவுகள் எவை என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
ப்ரோகோலி
அதிகளவு நியூட்ரியன்ட்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளை வழங்குவது மட்டுமின்றி ப்ரோகோலி உடலில் எஸ்ட்ரோஜென் அளவுகளை சீராக வைத்துக் கொள்ளவும் சிறப்பாக செயலாற்றுகிறது. இதில் அதிகளவு கால்சியம் நிறைந்து இருப்பதால், பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு சார்ந்த பிரச்சினைகளை சரி செய்யும். ப்ரோகோலி தவிர பிரஸ்ஸல்ஸ் முளைகள், காலிபிளவர் உள்ளிட்டவையும் இதேபோன்ற நன்மைகளை வழங்குகிறது.
மீன்
சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன்களை சாப்பிட்டால் இதய ஆரோக்கியம் மேம்படும். இவற்றில் ஏராளமான ஒமேகா 3 நியூட்ரியன்ட்கள் நிறைந்துள்ளன. இவை மாதவிலக்கு மற்றும் PCOS(polycystic ovary syndrome) காரணமாக ஏற்படும் ஹார்மோன் குறைபாடுகளை தவிர்க்க செய்யும்.
வெண்ணெய் பழம் (Avocado)
மன அழுத்தம் அதிகம் அனுபவிப்போர் அவகேடோ பழங்களை சாப்பிடலாம். இது ஹார்மோன்களை சரி செய்யும் தன்மை கொண்டுள்ளன. இதுதவிர இந்த பழம் கொலஸ்டிரால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கவும், வாத பிரச்சனையை தவிர்க்க உதவுகிறது.
மாதுளை
அதிகப்படியான ஆண்டி ஆக்சிடண்ட்கள் நிறைந்து இருப்பதால் மாதுளை பழம் உடலில் எஸ்ட்ரோஜென் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. இதுதவிர மார்பக புற்று நோய் பாதிப்பு ஏற்படுவதையும் தவிர்க்க உதவுகிறது.
ஆளி விதைகள் (Flax Seeds)
தாவரங்களில் அதிகம் நிறைந்து இருக்கும் லிக்னன்கள் ஆளி விதைகளில் அதிக அளவு நிறைந்து இருக்கிறது. இது ஹார்மோன் சமநிலையின்மையை சரி செய்வது மட்டுமின்றி பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
சீமைத்தினை
இதில் ஏராளமான வைட்டமின், பைபர் மற்றும் புரோடீன் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலில் இரத்த சர்க்கரை அளவுகளை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதில் உள்ள ஆண்டி ஆக்சிடண்ட் மற்றும் ஆண்டி இன்பிளமேட்டரி தன்மைகள் சர்க்கரை நோய் மற்றும் இதய பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கிறது.