Friday, September 17, 2021
Home Lifestyle Health இதயத்தை பத்திரமாக பாத்துக்க இதை மட்டும் செய்தால் போதும்!

இதயத்தை பத்திரமாக பாத்துக்க இதை மட்டும் செய்தால் போதும்!

உலகில் கொரோனாவைரஸ் பாதிப்பு தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக மாறி இருக்கிறது.

சர்வதேச இதயவியல் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களின் படி புகை பிடித்தல், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்றவைகளால் இதய பாதிப்பு அதிகம் ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. உலக இதய தினமான இன்று இந்த கூட்டமைப்பு மக்களிடையே இதய ஆரோக்கியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளது.

அதன்படி இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

ஆரோக்கிய உணவு முறை

தற்போதைய வாழ்க்கை முறையில், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், பாஸ்ட் புட் கலாச்சாரம் அதிகரிக்க துவங்கிவிட்டது. எனினும், வீட்டில் சமைக்கப்பட்ட உணவு வகைகள், காய்கறி மற்றும் பழ வகைகளை உட்கொள்வது இதயம் மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்துக்கும் ஏற்றது ஆகும். காய்கறிகள், தானிய வகைகள், கோழி இறைச்சி, முட்டைகள், ஆரோக்கியமான எண்ணெய், பால், பால் சார்ந்த உணவு வகைகளை உட்கொள்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். தினமும் குறைந்தபட்சம் ஐந்து வகையான உணவுகளை சாப்பிட வேண்டும்.

Also Read: உணவுகளில் உள்ள ஊட்டச்சத்தை நமது சமையல் முறை எவ்வாறு பாதிக்கிறது?

மன அழுத்தத்தை கையாளுதல்

தற்போதைய கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக வேலை இழப்பு, நிதி நெருக்கடி என பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகின்றன. எனினும், இவற்றால் பாதிக்கப்பட கூடாது என்பதில் ஒருவர் கவனமாக இருக்க வேண்டும். இதை எதிர்கொள்ள சிறந்த வழி பேசுவது மட்டும் தான். நண்பர்கள், உறவினர்கள் என யாராக இருப்பினும் கால் அல்லது வீடியோ சாட் மூலம் மனதில் பட்டதை வெளிப்படையாக பேச வேண்டும். இவ்வாறு செய்யும் போது மன அழுத்தம் குறையும்.

உடற்பயிற்சி

நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமாகும். வீட்டில் இருந்து பணியாற்றுவோர் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் ஸ்டெப்களை எட்டுவது மற்றும் கிடைக்கும் நேரங்களில் சிறுசிறு உடற்பயிற்சிகளை மேற்கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

போதுமான உறக்கம்

ஆரோக்கியமான இதயத்திற்கு போதுமான உறக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். உறக்கமின்மை காரணமாக இதய பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. வீட்டில் இருந்து பணியாற்றுவதால், மதிய வேளையில் சிறிது நேரம் உறங்கிவிட்டு, இரவில் விழித்திருத்தல் பலருக்கும் பிடித்திருக்கிறது. எனினும், நாளடைவில் இது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் தன்மை கொண்டதாகும். இதனால் நாள் ஒன்றுக்கு ஏழு முதல் எட்டு மணி நேர உறக்கம் உடலை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் பகலில் உற்சாகமாக இருக்கவும் இரவு உறக்கம் வழி செய்கிறது.

இதய ஆரோக்கியம்

மேலே குறிப்பிடப்பட்ட வழிமுறைகளை சரியாக பின்பற்றுவதோடு இதய ஆரோக்கியத்தை கவனித்தலும் அவசியம் ஆகும். இதனால் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் ஆகும்.

- Advertisment -

Most Popular

தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

வடகொரியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளிடம் இருந்து துண்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நடவடிக்கை வடகொரியாவின் ராணுவத்தை மேம்படுத்தும் கிம் ஜோங் உன்னின் முயற்சியில்...

என்னதான் நடக்குது? அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயம்.. இந்திய அணியில் நீடிக்கும் சிக்கல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்திய...

நகர்ந்து வரும் மிகப்பெரிய பனிப்பாறை.. திடீரென எழுப்பப்பட்ட அபாய ஒலி.. A68a பற்றிய முழு விளக்கம்

அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய ஐஸ்கட்டி பாறையான A68 நகர்ந்து வருவது பென்குயின் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் உலகம்...

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும்...

Recent Comments