Thursday, June 1, 2023
HomeLifestyleHealthகுழந்தை பிறந்த உடனே சேணைத் தண்ணீர் ஏன் கொடுக்கப்படுகிறது?

குழந்தை பிறந்த உடனே சேணைத் தண்ணீர் ஏன் கொடுக்கப்படுகிறது?

திருமணம் செய்த ஒவ்வொருவரின் வாழ்விலும் அர்த்தத்தை தருவது குழந்தைகள். தங்களின் பிம்பத்தை தாங்களே பார்க்கும்போது அவர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியை வார்த்தையால் விவரிக்க இயலாது.

குழந்தைகள் இந்த பூமியில் பிறந்தவுடன் அவர்களுக்கு சேணைத் தண்ணீர் தொட்டு வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இந்த பழக்கத்தை அனைவரும் கடைபிடிக்கின்றனர். இந்த பழக்கத்தை ஏன் கடைபிடிக்கிறார்கள் என்பதை கீழே காணலாம்.

பிறந்த குழந்தையின் நாவில் தேன் அல்லது இனிப்பு கலந்து வைக்கும் நீரே சேணை தண்ணீர் ஆகும். இந்த சடங்கிற்கு சேணை தொட்டு வைத்தல் என்று பெயர் வைத்து அழைக்கப்படுகிறது. இந்த சேணைத் தண்ணீரை அந்த குடும்பத்தில் மிகவும் முக்கியமான நபர்களை, அந்த குழந்தையின் மீது அதிக அக்கறை கொண்டவர்களை, அந்த குழந்தையின் வளர்ச்சியில் அதிக பங்கு கொண்டவர்களையே வைக்க அனுமதிப்பார்கள். இந்த சேணைத் தண்ணீர் பழக்கத்தின் அடிப்படை நோக்கம் குண நலனில் சிறந்து விளங்கும் நபர் இந்த சேணைத் தண்ணீரை பிறந்த குழந்தையின் நாக்கில் தொட்டு வைத்தால் அந்த குழந்தை நல்ல பண்புகளுடன் வளரும் என்ற நம்பிக்கையே ஆகும்.

சிலரது குடும்பத்தில் சேணை தண்ணீரில் தங்க மோதிரம் போன்றவற்றை தேய்த்து, அதில் தேன் கலந்து குழந்தைக்கு புகட்டுவர். சில குடும்பங்களில் பசு நெய் மற்றும் தேன் ஆகியவற்றை கலந்து தங்கம் அல்லது வெள்ளி கிண்ணத்தில் வைத்து ஒரு தங்கத்துண்டினை (மோதிரம் போன்றவற்றை) உரைத்து குழந்தைக்கு புகட்டுவர்.

ஆனால், இந்தியாவில் பெரும்பான்மையான குடும்பங்களில் தமிழ்நாட்டில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களில் சேணைத் தண்ணீர் தொட்டு வைக்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. பிறந்த குழந்தை தாய்ப்பால் குடிக்கும் முன்னர் இந்த சேணைத் தண்ணீர் கொடுக்கப்படுகிறது என்றால் அதன் சிறப்பு எவ்வளவு முக்கியமானது என்று புரிந்து கொள்ளுங்கள்.