Wednesday, May 31, 2023
HomeLifestyleHealthHealth: யாரெல்லாம் முட்டை சாப்பிடக்கூடாது? முதல்ல இதைப்படிங்க..!

Health: யாரெல்லாம் முட்டை சாப்பிடக்கூடாது? முதல்ல இதைப்படிங்க..!

அசைவ உணவுகளை தினமும் சாப்பிட முடியாதவர்கள் தினமும் தங்களது சாப்பாட்டில் முட்டையை சேர்த்துக்கொள்ள விரும்புவார்கள். இறைச்சிகளை சாப்பிடாதவர்கள் கூட முட்டையை விரும்பி சாப்பிடுவார்கள. முட்டையில் ஏராளமான புரதச்சத்துகள் இருந்தாலும் அளவுக்கு மீறி சாப்பிட்டால் அதன் காரணமாகவும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

முட்டை சாப்பிடுவதன் மூலம் தசைகள், எலும்புகளுக்கு பலம் கிடைக்கும். ஆனால் முட்டை அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆரோக்கியமான உணவா? என்றால் இல்லை என்றே நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

முட்டையில் 6.3 கிராம் புரதம், 69 மில்லிகிராம் பொட்டாசியம், வைட்டமின் ஏ – 5.4%, கால்சியம் – 2.2% , இரும்புச்சத்து – 4.9% உள்ளது. இருப்பினும் முட்டை சிலரது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். யாரெல்லாம் முட்டை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பதை கீழே விரிவாக காணலாம்.

இதய நோயாளிகள்:

இதய நோயாளிகள் முட்டை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிக கொலஸ்ட்ரால் பக்கவாதம், இதய நோய் ஆபத்தை அதிகரிக்கிறது. இதய நோயாளிகள் முட்டை உண்பதால் வருடந்தோறும் உலகளவில் 4.4 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது. முட்டையின் மஞ்சள் கருவை உண்பதால் தமனிகளில் அடைப்பு உருவாகும் ஆபத்தும் உள்ளது.

கொழுப்பு உள்ளவர்கள்:

கொழுப்பு பிரச்சினை எனப்படும் கொலஸ்ட்ரால் நோயாளிகள் முட்டை சாப்பிடக்கூடாது. முட்டையின் மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் உள்ளது. என்.சி.பி.ஐ. அறிக்கையின்படி, அதிகப்படியான கொலஸ்ட்ரால் உணவுகளை எடுத்துக்கொள்வது மிக கடுமையான ஆரோக்கிய சிக்கல்களை ஏற்படுத்திவிடும். உங்களுக்கு கொலஸ்ட்ரால் சிக்கல் இருந்தால் முட்டை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

சர்க்கரை நோயாளிகள்:

ஆங்கில நாளிதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், வாரத்திற்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முட்டைகளை சாப்பிடுபவர்களுக்கு 39 சதவீத நீரிழிவு ஏற்படும் ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சீனாவில் முட்டையை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

புற்றுநோயாளிகள்:

புற்றுநோயாளிகள் முட்டை சாப்பிடுவது குறித்து மருத்துவருடன் ஆலோசித்தே சாப்பிட வேண்டும். முட்டைகளை அதிக அளவில் உட்கொள்வது பல வகையான புற்றுநோய்களுடன் தொடர்புடையது என என்.ஐ.எச். ஆய்வு எச்சரித்துள்ளது. இது புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும், வாரத்திற்கு 5 அல்லது அதற்கு மேற்பட்ட முட்டைகளை உண்ணும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அபாயம் உள்ளது.

எனவே, மேற்கண்ட சிக்கல் இருப்பவர்கள் மருத்துவருடன் ஆலோசனை செய்துவிட்டு முட்டைகளை தொடர்ந்து சாப்பிடுவது நல்லது ஆகும்.