Thursday, June 1, 2023
HomeLifestyleHealthஆண்களையும் விட்டுவைக்காத தைராய்டு..! தப்பிப்பது எப்படி?

ஆண்களையும் விட்டுவைக்காத தைராய்டு..! தப்பிப்பது எப்படி?

பெண்கள் பெரிதளவில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் தைராய்டு பிரச்சினையும் ஒன்றாகும். சமீபகாலமாக பெண்களைப் போலவே ஆண்களும் தைராய்டு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

தைராய்டு சுரப்பி சிறியதாக இருந்தாலும் அதன் செயல்பாடு மிகவும் பெரியது. இது நமது உடலின் செயல்பாட்டிற்கு தேவையான முக்கியமான ஹார்மோன் ஆகும். இது உடல் வெப்பநிலை, கொழுப்பை ஒழுங்குபடுத்துகிறது. இது உடல் மற்றும் இதய துடிப்பு, சுவாசம், செரிமானம் மற்றும் மூளை வளர்ச்சியில் வளர்சிதை மாற்றத்தின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிப்பதால் உடல் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தைராய்டு சுரப்பியில் ஹார்மோன் குறைவாக இருந்தால் அது ஹைப்போ தைராய்டு என்றும், அதிகமாக இருந்தால் ஹைப்பர் தைராய்டு என்றும் அழைக்கப்படுகிறது. தைராய்டு பிரச்சனையின் முதல் அறிகுறிகள் எடை அதிகரிப்பு, சோர்வு மற்றும் தசை பலவீனம் ஆகும்.

ஆண்களின் டி.எஸ்.எச். அளவு:

டி.எஸ்.எச். இயல்பான நிலை (சப்ளினிகல் ஹைப்போ தைராய்டிசம்) 0.4 mU/L முதல் 4.0 mU/L வரை இருக்க வேண்டும். 18 மற்றும் 50 வயதுக்குட்பட்ட ஆண்களில், TSH அளவுகள் 0.5 – 4.1 mU/L இடையே இருக்க வேண்டும். 51 முதல் 70 வயதுடைய ஆண்களில், TSH அளவுகள் 0.5 முதல் 4.5 mU/L வரை இருக்க வேண்டும். 70 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில், TSH அளவு 0.4 – 5.2 mU/L ஆக இருக்க வேண்டும்.

இரண்டு வகையான தைராய்டுகளுமே ஆபத்தானவை. தைராய்டு தூண்டும் ஹார்மோன்களைச் சரிபார்க்க TSH சோதனை செய்யப்படுகிறது. TSH இன் சாதாரண நிலை 0.4 mU/L முதல் 4.0 mU/L வரை இருக்கும். 2.0 ஐ விட அதிகமான TSH அளவு ஹைப்போ தைராய்டாக கருதப்படுகிறது. அதே தைராய்டு அளவு 0.4 mU/L முதல் 4.0 mU/L வரை குறைவாக இருந்தால், அது ஹைப்பர் தைராய்டு ஆகும்.

பரிசோதனை:

ஒரு ஆணின் உடலில் அதிக தைராய்டு அறிகுறிகள் தோன்றினால், மருத்துவர்கள் T3 பரிசோதனையை நடத்தச் சொல்கிறார்கள். T3 இன் சாதாரண நிலை 100 – 200 ng/dL ஆகும். T3 ஹார்மோன் சோதனைக்காக T3 அல்லது ட்ரையோடோதைரோனைன் சோதிக்கப்படுகிறது.

ஆரோக்கியமான உடலில் T3 மற்றும் T4 ஹார்மோன்கள் சரியான அளவில் உள்ளன. இந்த இரண்டு ஹார்மோன்களும் TSH ஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன. உடலில் T4 அளவு அதிகரிப்பதால் பதட்டம், எடை இழப்பு, உடல் நடுக்கம் போன்ற உடல்நலப் பிரச்சனைகள் தோன்றும். உடலில் T4 அளவை சரிபார்க்க தைராக்ஸின் சோதனை செய்யப்படுகிறது.

தைராய்டு பிரச்சினையை உணவுப்பழக்கம் மட்டுமின்றி யோகா மூலமும் கட்டுப்படுத்தலாம். மத்ஸ்யாசனம், உஸ்த்ராசனம், தனுஷாசனம் மற்றும் வஜ்ராசனம் போன்ற யோகாக்கள் தைராய்டு பிரச்சனையை கட்டுப்படுத்த பெரிதும் பலனளிக்கும். தைராய்டு அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க மெக்னீசியம், அயோடின், வைட்டமின்கள், கால்சியம் மற்றும் புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். புகைப்பிடித்தல் மது அருந்துதல் பழக்கத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்.