சென்னை: நாடு முழுக்க ப்ளூ காய்ச்சல் Influenza A subtype H3N2 வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டிலும் இதனால் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமாக இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கிட்டத்தட்ட 1000 பேர் அதிகாரபூர்வமாக இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். உண்மையான எண்ணிக்கை சில ஆயிரங்களை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பலருக்கு உடல் வலி, காய்ச்சல், சளி பிரச்சனை திடீர் திடீர் ஏற்பட தொடங்கி உள்ளது.
ஒரு வாரம் என்று இல்லாமல் இரண்டு வாரம் கூட இந்த காய்ச்சல் நீடிக்க தொடங்கி உள்ளது குழந்தைகள், வயதானவர்கள், இளைஞர்கள் என்று வயது வித்தியாசம் இன்றி இந்த காய்ச்சல் ஏற்படுகிறது .
இந்த நிலையில்தான், இது தொடர்பாக மக்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை முக்கியமான சில அறிவுரைகளையும் வழங்கி உள்ளது.
அதில்,
அறிகுறிகள் எப்படி இருக்கிறதோ அதை பொறுத்தே சிகிச்சை அளிக்க வேண்டும்.
காய்ச்சல், இருமல் போன்ற சாதாரண பாதிப்புகள் உள்ளவர்களுக்கு பரிசோதனை அவசியம் இல்லை.
ஓசல்டாமிவிா் போன்ற மருந்துகள் இவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டியது இல்லை
குழந்தைகள், முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டால் மட்டும் அவர்களுக்கு இந்த மருந்தை மருத்துவர் அறிவுரையுடன் கொடுக்கலாம்
மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கலாம்
சளியில் ரத்தம் கலந்து வருதல், மயக்க நிலை இருந்தால் உடனே மருத்துவமனையில் சேர வேண்டும்
மற்றபடி பாதிக்கப்பட்ட நபர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்
ALSO READ | எப்பவுமே ஹெட்போன் யூஸ் பண்றீங்களா..? தயவுசெஞ்சு இனி அப்படி பண்ணாதீங்க..!