Monday, May 29, 2023
HomeLifestyleHealthலிப்லாக் செய்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..! அப்புறம் அவஸ்தைபடாதீங்க!

லிப்லாக் செய்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..! அப்புறம் அவஸ்தைபடாதீங்க!

காதல், காமம், அன்பு என்று பல பரிணாமங்களின் வெளிப்பாடுதான் முத்தம். ஒருவர் மீத ஒருவர் வைத்துள்ள அன்பின் ஆழமே முத்தம் என்று கூட சொல்லலாம். தாம்பத்ய உறவில் கணவன் – மனைவி ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பின் வெளிப்பாடாகவும் முத்தம் உள்ளது.

லிப்லாக்

தாம்பத்ய உறவை மேலும் பலப்படுத்துவதில் இதழ் முத்தத்தின் பங்கு மிகவும் தவிர்க்க முடியாது. ஆங்கிலத்தில் லிப்லாக் என்று அழைக்கப்படும் இந்த இதழ் முத்தங்களை பரிமாறி கொள்ளும் போது காதலும், நெருக்கமும் அதிகரிக்கும்.

லிப்லாக் அளவு கடந்த ஆனந்தத்தை தர வேண்டுமென்றால், இதழ்கள் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும். முறையாக வாய் பராமரிப்பு இல்லாதது இதழ்களை பாதிக்கக்கூடும். இது தொற்று பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வாயில் உள்ள பிரச்சனைகள் பாலியல் நோயின் அறிகுறிகளாக இருக்கும்போது, உங்களுடைய துணைக்கும் பரவலாம். வாய் சுகாதாரம் இல்லையென்றால் வரும் ஆபத்து குறித்து இங்கு காணலாம்.

பற்சிதை, ஈறு வீக்கம்

வாயில் பாக்டீரியா தொற்று இருக்கும் நபராக நீங்கள் இருக்கும்போது, எச்சில் வழியாக கிட்டத்தட்ட 80 மில்லியன் பாக்டீரியாக்கள் உங்கள் துணைக்கு பரவ வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பாக்டீரியா அல்லது வைரஸ் மூலம் பரவும் வாய் சார்ந்த நோய்களை விடவும் அதிக பிரச்சனைகள் வாய்வழி முத்தத்தில் பரவுகிறது.

ஸ்டிரெப்டோகோகஸ் மூடன்ஸ் பாக்டீரியா மூலமாக பற்சிதைவு ஏற்படலாம். இது உற்பத்தி செய்யும் அமிலம் பற்களில் சிதைவை ஏற்படுத்திவிடுகிறது. லிப் லாக் செய்வதன் மூலம் இந்த பாக்டீரியா பரவுகிறது. பிரெஞ்சு முத்தம் கொடுத்த பிறகு ஈறு வீக்கம் ஏற்பட்டால் அலட்சியம் செய்யக் கூடாது. இது ஒரு வருடத்தில் மிகுந்த பாதிப்புகள் உண்டாக்கும்.

வாய் ஆரோக்கியம்

ஒருவரிடமிருந்து இந்த பாக்டீரியா வாயில் உள்புகுந்தால், அவர்களது ஈறுகளை அரிக்கத் தொடங்கும். இது ஈறுகளில் எரிச்சல், வீக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும். இது பல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். உங்களுக்கு காய்ச்சல், சளி போன்ற பிரச்சினைகள் இருக்கும் தருணங்களில் உங்கள் துணைக்கு முத்தம் தருவதை தவிர்ப்பது நல்லது ஆகும்.
இதனால், எப்போதும் வாயை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் நல்லது ஆகும்.