Monday, September 27, 2021
Home Lifestyle Health கடக்நாத் எனும் கருங்கோழியில் அப்படி என்ன ஸ்பெஷல்.. வாங்க ஒரு புடி புடிப்போம்!

கடக்நாத் எனும் கருங்கோழியில் அப்படி என்ன ஸ்பெஷல்.. வாங்க ஒரு புடி புடிப்போம்!

கடக்நாத் கோழி.. நம்ம ஊரில் கருங்கோழி என்று அழைக்கபடும் இது மத்யபிரதேசத்தை பூர்விகமாக கொண்டது. இதறக்கு ” காளி மாசி ” என்று இன்னொரு பெயர் உள்ளது. அதாவது கருஞ்சதை கோழி என்று பொருள்.   இதன் இறைச்சி, முட்டை, எலும்பு என அனைத்துமே கருமை நிறத்தில் காணப்படுகின்றது.  இதறக்கு கரணம் இதன் உடலில் நிறைந்துள்ள  மெலனின் நிறமி.

கருமை நிறம் கொண்ட மூலிகை பொருளுக்கு மருத்துவ குணம் அதிகம் என்று பழைய வைத்திய நூல்கள் குறிப்பிடுகிறது. ஆகையால் இந்த கருமை நிற இறைச்சிக்கு மௌசு அதிகம்.

மற்ற நாட்டுக்கோழிகளை காட்டிலும் புரத சத்து, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மருத்துவ குணம் அதிகம் இருப்பதாக சொல்லப்படும் கடக்நாத் கோழி, கிலோ 900 வரை விற்கப்படுகிறது. இந்த கோழி வளர்வதற்கு அதிக நாட்கள் எடுத்துக்கொள்வதால் விலை கூடுதலாக விற்கப்படுகிறது. பிராய்லர் கோழி வெறும் 45 நாட்கிளில் 2.5 கிலோ வளர்ச்சி அடைந்துவிடும், ஆனால் கடக்நாத் கோழி 1.5 கிலோ வளர ஆறு மாத காலம் ஆகும்.

பிராய்லர் கோழியை ஒப்பிடும் போது இதில் கொலஸ்ட்ரால் அளவு மிகவும் குறைவு. பிராய்லர் மற்றும் வேறு கோழி வகைகளில் 13 -25  % கொலஸ்ட்ரால் அளவு உள்ளது. ஆனால் இதில் ௦.73 -1.05% மட்டுமே இருக்கிறது. மற்ற கோழிகளில், புரதத்தின் அளவு 18 -20% வரை இருக்கும். ஆனால் கடக்நாத் கோழியில் 25 % மேல் புரத சத்து இருக்கிறது.  இந்த கோழி மற்ற  நாட்டுக்கோழிகளை போல அடை காப்பது இல்லை. மற்றும் முட்டையின் கருவுறுதல் வீதமும் மிகக் குறைவு.

கடக்நாத் கோழியின் மருத்துவ குணங்கள்:

குட்டம், சிரங்கு, வாதம் போன்ற நோய்கள் கருங்கோழியின் இறைச்சியால் குணமாகும் என்று சித்த மருத்துவத்தில் சொல்லப்படுகிறது. இது ஆண்களின் வீரியத்தை அதிகப்படுத்த பயன்படுத்தினர் என்றும் கூறப்படுகிறது.

கருங்கோழியின் மருத்துவ பயன்கள் பற்றி சித்தர்கள் பாடல் வரியில் குறிப்பிட்டு உள்ளனர்.

” குட்டங் கடிகிருமி கோராவா தக்கூட்ட

மட்டிடாச் சூலையறு மாதரசே – துட்ட

கிரந்தியொடு புண்வலிபோங் கேளுடலு ரக்கு

மருந்துகருங் கோழியூன் வை”

முற்காலத்தில் கருங்கோழியுடன் பிற மூலிகைகளை சேர்த்து செய்யப்படும் மருந்து மூலம், வாயு போன்ற பல நோய்களை குணப்படுத்தியதாகவும், இதன்  முட்டையை சாப்பிட்டு வர உடல் வலிமை அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.

கருங்கோழியின் மருத்துவ நன்மைகள் பற்றி எந்த ஒரு மருத்துவ துறையும் அதிகாரப்பூர்வமாக  வெளியிடவில்லை. இருப்பினும் ஸ்டெராய்டு ஊசி மூலம்  வளர்க்கப்படும் பிரொய்லெரை ஒப்பிடும்போது இயற்கையான சூழலில் வளரும் நாட்டுக்கோழி, கருங்கோழியை சாப்பிடுவதால் உடலுக்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்காது.

- Advertisment -

Most Popular

தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

வடகொரியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளிடம் இருந்து துண்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நடவடிக்கை வடகொரியாவின் ராணுவத்தை மேம்படுத்தும் கிம் ஜோங் உன்னின் முயற்சியில்...

என்னதான் நடக்குது? அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயம்.. இந்திய அணியில் நீடிக்கும் சிக்கல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்திய...

நகர்ந்து வரும் மிகப்பெரிய பனிப்பாறை.. திடீரென எழுப்பப்பட்ட அபாய ஒலி.. A68a பற்றிய முழு விளக்கம்

அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய ஐஸ்கட்டி பாறையான A68 நகர்ந்து வருவது பென்குயின் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் உலகம்...

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும்...

Recent Comments