இருமல், தூக்கம், குறட்டை போன்றே தும்மல் என்பதும் இயற்கையான ஒன்றாகும். ஒவ்வொருவருக்கும் தும்மல் வரும்போது ஒவ்வொரு விதமாக சத்தம் வரும். ஒருவருக்கு தும்மல் கடும் வேகத்தில் வரும் ஆற்றல் கொண்டது. இதன்காரணமாகவே, தும்மல் வரும்போது நம்மையும் மீறி கண்களை மூடிக்கொள்கிறோம். சிலருக்கு தொடர்ந்து தும்மல் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அது அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.
தும்மல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
• தும்மல் வருவது போல உணர்வு ஏற்பட்டால் கட்டை விரலையும், ஆள்காட்டி விரலையும் கொண்டு நுனி மூக்கை லேசாக ஆட்டினால் தும்மல் வராது.
• வாயை சிறு துணி கொண்டு மூடிவிட்டு, மூக்கின் வழியாக வேகமாக காற்றை வெளியே விடுங்கள்.
• சிறு துணி அல்லது டிஷ்யூ பேப்பரால் வாயை மூடியபடி தும்மினால் தும்மலின் அளவு குறையும்.
• எக்காரணத்தை கொண்டும் உள்ளங்கையை குவித்து மூக்குக்கும், வாய்க்கும் இடையில் வைத்து தும்மாதீர்கள். அவ்வாறு தும்மினால் கிருமிகளானது உங்களின் உள்ளங்கையிலேயே தங்கிவிடும்.
• வீட்டிலிருக்கும் பொழுது தும்மினால், வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பை போட்டு மூக்கை கழுவுங்கள்.
• வீட்டில் செல்ல பிராணிகள் இருந்தால் அதை தூரமாக இருக்க வையுங்கள்.
• உங்களுக்கு ஏற்படும் தும்மலுக்கு செல்ல பிராணிகள் கூட காரணமாக இருக்கலாம்.
• ஆவி பிடிப்பது சிலருக்கு தும்மலை தடுக்கும். அவ்வாறு இருப்பவர்கள் வேப்பிலையுடன், மஞ்சள் பொடி சேர்த்து ஆவி பிடிப்பது நல்லது.
• தூசு அலர்ஜி உள்ளவர்கள், தூசு அதிகம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். மேலும் வீட்டில் தூசு சேராமலும் பார்த்து கொள்ளுங்கள்.
• ஏ.சி காற்று நேராக முகத்தில் படும்படி அமராதீர்கள். அவ்வாறு அமரும்போது அதிகப்படியான தும்மல் ஏற்படும்.
• ஊதுபத்தி புகை, பட்டாசு புகை மற்றும் வாகன புகை என எந்தவொரு புகையையும் சுவாசிக்காமல் இருந்தாலே தும்மல் வராமல் காக்க முடியும்.