இன்று பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள ஏராளமான அழகு சாத நிலையங்களும், அழகுசாதன பொருட்களும் வந்துவிட்டது. ஆனால், அந்த காலத்தில் பெண்கள் தங்களை அழகாக பராமரித்துக் கொள்ள இயற்கையாக ஏராளமான பொருட்கள் இருந்தது. அதில், முதன்மையானது மருதாணி. மருதாணி அழகிற்கு மட்டுமில்லாமல் ஆரோக்கியத்திலும் முக்கியப்பங்கு வகிக்கிறது.
- இது நமது உடலில் உள்ள வெப்பத்தை தணித்து குளிர்ச்சி அடைய செய்கிறது.
- மருதாணியின் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை ஆகும்.
- மருதாணி இலை ஒரு சிறந்த கிருமி நாசினி. இதன் காரணமாக நமது கண்ணுக்கு புலப்படாத கிருமிகளை மருதாணி அழிக்கும்.
- சொறி சிரங்கு போன்ற தொற்றுகள் அடிக்கடி ஏற்படும் நபர்கள் மருதாணியை தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல பலன் தரும்.
- கைகளில் மருதாணியை வைப்பதால் நகத்தின் இடுக்கில் சேரும் அழுக்குகளை தடுக்கிறது.
- மருதாணி வைப்பதால் இரத்த ஓட்டம் சீராகும், இதயப் படபடப்பு மற்றும் ரத்த அழுத்தம் குறையும்.
- கால்களில் ஏற்படும் வெடிப்புகளில் மருதாணியை பூசி வந்தால் வெடிப்புகள் விரைவில் குணமாகும்.
- மருதாணியை அரைத்து தலையில் தேய்த்து வர முடி உதிர்தல், இளநரை போன்ற தலைமுடி பிரச்சனை அனைத்தில் இருந்தும் விடுபடலாம்.
- தலைமுடி அடர்த்தியாக வளரவும் மருதாணி உதவுகிறது.
இவ்வளவு மருத்துவ குணம் கொண்ட மருதாணி குளிர்ச்சியான தன்மை கொண்டது. இதனால், சிலருக்கு மருதாணி வைப்பதால் சளி பிடிக்கும். அவ்வாறு சளி பிடிக்காமல் இருக்க மருதாணி இலைகளோடு 7 அல்லது 8 நொச்சி இலைகளையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.
மருதாணியை இயற்கையாக அதாவது செடிகளில் இருந்து பயன்படுத்தினால் மட்டுமே இந்த பலன்களை பெற முடியும். மருதாணி பொடிகள் என்று கடைகளில் விற்கப்படம் பொருட்களில் இருந்து பலன்களை எதிர்பார்க்க முடியாது.
ALSO READ | லெகின்சை எப்படி தேர்வு செய்வது..? கர்ப்ப காலத்தில் அணியலாமா?