இன்றைய இளைஞர்கள். மாணவர்கள், பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை முடி உதிர்வாகும். முடி உதிர்வு என்பது கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதால் பலரும் முடி உதிர்வை தடுப்பதற்கு பல முறைகளை கையாள்கின்றனர்.
முடி உதிர்வை தடுப்பதற்கு நாம் முதலில் சிறந்த எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும். முடி வளர்ச்சிக்கும், முடி ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமானது பயோட்டின் ஆகும். பாதாம் எண்ணெயில் பயோட்டின்கள் நிறைந்துள்ளன. எனவே உங்கள் தலைமுடியை பாதம் எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்வது உங்கள் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
உங்கள் முடி வேர்களுக்கு ஊட்டமளிக்கும், முடி உதிர்வைக் குறைத்து, உங்கள் தலைமுடியை பளபளப்பாக்க உதவும். மேலும், உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கும். பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை உள்ளன. இந்த சத்துக்கள் முடி உதிர்வைக் குறைத்து, முடியின் அளவை அதிகரிக்கச் செய்யும். பாதாம் எண்ணெய் ஆன்டி ஆக்ஸிடன்ட்களின் சக்திவாய்ந்த ஆதாரமாகவும் உள்ளது.
பாதாம் எண்ணெய் நமது முடியை மென்மையாக்குவதுடன், பட்டுப்போன்ற முடியை தருகிறது. பாதாம் எண்ணெயில் உள்ள ஒலிக் மற்றும் லினோலிக் அமிலங்கள் முடியை வலுப்படுத்தி மென்மையாக்கும். இதில் உள்ள வைட்டமின் ஈ ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
பாதாம் எண்ணெய் பயன்படுத்துவது மட்டுமின்றி பயோட்டின் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது ஆகும். மேலும், மனதிலும் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது ஆகும்,