நமது உடலில் எத்தனையோ பாகங்கள் இருந்தாலும் மிகவும் முக்கியமான உறுப்புகள் மூளையும், இதயமுமே ஆகும். இதில் ஏதேனும் சிறிய பாதிப்புகள் ஏற்பட்டாலும் உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடும். சமீபகாலங்களில் மாறி வரும் உணவுப்பழக்கங்கள் நமது இதய ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி மூளை ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்க கூடியதாக மாறி வருகிறது.
மூளை ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அதாவது மூளைச் செல்களின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய உணவுகளை கீழே காணலாம். அதாவது கீழ்க்கண்ட உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொண்டால் நமது மூளைச் செல்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று நிபணர்கள் எச்சரிக்கின்றனர்.
சர்க்கரை உணவுகள்:
சர்க்கரை மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகள் நீண்ட நாட்களாக தொடர்ந்து சாப்பிடும்போது, அது பல வகையான நரம்பியல் பிரச்சனைகளை ஏற்படுத்தி நினைவாற்றலை அழிக்கத் தொடங்குகிறது. சர்க்கரை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது ஒருவரது கற்கும் திறன் பாதிக்கப்படும். எனவே உங்களின் மூளை ஆரோக்கியமாக செயல்பட விரும்பினால், சர்க்கரை நிறைந்த உணவுகளை உண்பதைத் தவிர்ப்பது நல்லது.
செயற்கை சுவையூட்டிகளை நீண்ட காலமாக தொடர்ந்து அதிகளவில் உட்கொள்ளும் போது, அது மூளையை சேதப்படுத்துவதோடு, அறிவாற்றல் திறனையும் பாதிக்கும். அதனால்,
துரித உணவுகள்:
மாண்ட்ரீட் பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ஜங்க் உணவுகள் எனப்படும் துரித உணவுகள் மூளையில் உள்ள நொதிகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, மன இறுக்கம், பதற்றம் போன்றவற்றை உண்டாக்குவது தெரிய வந்தது. இந்த துரித உணவுகள் டோபமைன் என்னும் மனநிலையை சந்தோஷமாக வைத்துக் கொள்ளும் ஹார்மோன்களின் உற்பத்தியை பாதிக்கிறது. நினைவாற்றல் மற்றும் மூளை ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், துரித உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.
உப்பு அதிகமுள்ள உணவுகள்:
உப்பு அதிகம் நிறைந்த உணவுகள் இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்பதை அறிவோம். உப்பு அதிகமுள்ள உணவுகள் ஒருவரது அறிவாற்றல் செயல்பாட்டை பாதித்து, சிந்திக்கும் திறனையும் பாதிக்கலாம். எனவே உங்கள் மூளை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், உணவில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள் மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை உண்பதைத் தவிர்த்திடுங்கள்.
இதுதவிர வேறு ஏதேனும் உடல்நலக் கோளாறுகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது ஆகும்.