Wednesday, May 24, 2023
HomeLifestyleHealthஅசைவப் பிரியர்களா நீங்கள்..? எலும்புகளுக்கு ஆபத்து காத்திருக்கு! உஷார்

அசைவப் பிரியர்களா நீங்கள்..? எலும்புகளுக்கு ஆபத்து காத்திருக்கு! உஷார்

நம்மில் பலரும் வாரத்திற்கு ஒரு முறையாவது அசைவ உணவுகளை ஒரு பிடிபிடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். சைவப் பிரியர்களை காட்டிலும் அசைவப் பிரியர்களே நமது ஊரில் அதிகளவில் உள்ளனர் என்பதும் கூட ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தகவல் ஆகும்.

அசைவ உணவுகள்

அசைவ உணவுகளில் உடலுக்குத் தேவையான ஏராளமான ஆரோக்கியங்களும் அடங்கியுள்ளது. அசைவ உணவுகளில் புரதம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளது. ஆனால் அதிகமான புரத உணவுகள் எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கும் அபாயம் உள்ளது என்று கால்சியம் இழப்புக்கு வழிவகுக்கும் என ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி தெரிவித்திருப்பது அசைவ உணவு பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நம் உடலில் உள்ள எலும்பு ஆரோக்கியத்திற்கு புரதம் முக்கியமானது. ஆனாலும் அசைவ உணவுகளில் சிவப்பு இறைச்சி அதிகம் எடுத்து கொள்வது எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் என அவர் எச்சரித்துள்ளார். அதிகளவில் சிவப்பு இறைச்சியை மட்டும் எடுத்துக்கொள்ளாமல் அதற்கு பதிலாக பால், மீன், கோழி மற்றும் தாவர அடிப்படையிலான புரதச் சத்துகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர் தெரிவித்துள்ளார்.

எலும்புகளுக்கு ஆபத்து

புரதம் நிறைய உள்ள பழங்கள், காய்கறிகள், முழு தானியங்களை உண்பதம் மூலம் புரதத் தேவையை சமநிலைப்படுத்தப்பட வேண்டும். சிவப்பு இறைச்சியில் அதிக பாஸ்பரஸ்-கால்சியம் விகிதம் உள்ளது. ரெட் மீட் எனப்படும் சிவப்பு நிற இறைச்சியை சாப்பிடும்போது இரத்தத்தை அமிலமாக்கும் நிகழ்வு நடப்பதாகவும், இதுவே எலும்புகளில் இருந்து கால்சியம் அகற்றப்படுவதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அசைவ உணவுகளை உண்ணும்போது கிடைக்கும் புரதமும், தாவர உணவுகளை உட்கொள்ளும்போது கிடைக்கும் புரதங்களில் உள்ள அமினோ அமிலங்களின் கலவையும் வேறு, வேறு வகையைச் சேர்ந்தவை. அதனால் அசைவ உணவுக்கு சைவ உணவு மாற்று உணவாக இருக்காது.

அபாயம்

இருந்தாலும், அதிகமாக சிவப்பு இறைச்சி உண்ணும்போது நீரிழிவு, இதய நோய், சில புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவர்களும், நிபுணர்களும் எச்சரிக்கின்றனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப அசைவ உணவுகளை அளவாக எடுத்துக்கொள்வது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது ஆகும்.