Thursday, June 1, 2023
HomeLifestyleHealthகாலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது நல்லதா? கெட்டதா?

காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது நல்லதா? கெட்டதா?

ஒரு மனிதனின் உடலுக்கு உணவுகள் எந்தளவு ஊட்டச்சத்தை அளிக்கிறதோ, அதைவிட பன்மடங்கு ஆற்றலை தண்ணீர் அளிக்கிறது. மனிதன் மட்டுமின்றி பெரும்பாலான உயிரினங்களுக்கு தண்ணீர் அவசியம் ஆகும். அதன் காரணமாகவே நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவர் போற்றியுள்ளார். அப்படிப்பட்ட தண்ணீரை மனிதர்கள் தினசரி குறிப்பிட்ட அளவு கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பெரும்பலான மக்கள் காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு, தண்ணீர் குடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அதேசமயம், தூங்கி எழுந்தவுடன் உமிழ்நீரில் பாக்டீரியாக்கள் இருப்பதால் பல் துலக்குவதற்கு முன்பு தண்ணீர் குடிக்கக்கூடாது என்று பலர் நம்புகிறார்கள். ஆனால், பல் துலக்கும் முன்பே காலையில் எழுந்தவுடன் வாயை கொப்பளித்துவிட்ட தண்ணீர் குடிப்பதால் ஏராளமான நன்மைகள் நமக்கு ஏற்படும்.

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கவே மருத்துவர்கள் எப்போதும் பரிந்துரைக்கின்றனர். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது, உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். உடலின் ஜீரண சக்தி அதிகரிக்கும் மற்றும் உடலில் இருந்து பல வகையான நோய்களும் நீங்குவதாகக் கூறப்படுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது, நச்சுகள் மற்றும் இறந்த செல்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால், உங்கள் சருமம் புத்துணர்ச்சியாக காணப்படும். மேலும், உடலில் புதிய செல்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பதால், உங்கள் சருமமும் பளபளப்பாக மின்னும். நீங்கள் தண்ணீரைக் குடிக்கும்போது உங்கள் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. இதன் விளைவாக விரைவான செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்ற விகிதம் ஏற்படுகிறது. இது நாள் முழுவதும் உங்களை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.

இது நோய்கள் மற்றும் கிருமிகளிலிருந்து உங்கள் உடலை சிறப்பாக எதிர்த்துப் போராட உதவும். இதனால், எந்த நோய்தொற்றும் ஏற்படாமல் நீங்கள் ஆரோக்கியமாக வாழலாம். உங்களை நீரேற்றமாக வைத்திருப்பதும் அதிக தண்ணீர் குடிப்பதும் உங்கள் சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். உடல் பருமன், மலச்சிக்கல், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களும் தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரைக் குடித்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இதனால், கட்டாயம் தினசரி காலையில் எழுந்தவுடன் தண்ணீரை குடிக்க வேண்டும். அதுவும் தற்போது வெயில் காலம் என்பதால் எந்தளவு தண்ணீர் குடிக்கிறோமோ, அந்தளவு உடலுக்கு நல்லது ஆகும்.

ALSO READ | வாட்டி வதைக்கும் வெயில்..! வீடு எப்போதும் கூலிங்கா இருக்க என்ன செய்யனும்?