Monday, May 29, 2023
HomeLifestyleHealthஎப்பவுமே ஹெட்போன் யூஸ் பண்றீங்களா..? தயவுசெஞ்சு இனி அப்படி பண்ணாதீங்க..!

எப்பவுமே ஹெட்போன் யூஸ் பண்றீங்களா..? தயவுசெஞ்சு இனி அப்படி பண்ணாதீங்க..!

இன்று செல்போன்கள் பயன்படுத்தும் பலரும் ஹெட்போன்களும் பயன்படுத்துகின்றனர். நாம் வீடியோ பார்ப்பதற்கும், பாடல்கள் கேட்பதற்கும் ஹெட்போனை பயன்படுத்துகின்றோம்.

ஆனால், சரியான ஹெட்போனை பயன்படுத்தாவிட்டாலோ அல்லது சத்தம் அதிகம் வரும் அளவில் ஹெட்போனை பயன்படுத்தினாலோ மோசமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும். அந்த பாதிப்புகள் என்னவென்று கீழே காணலாம்.

  • அதிக நேரம் ஹெட்போன் பயன்படுத்துவபவர்களுக்கு காது கேட்கும் திறனில் குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
  • அதிகமாக ஹெட்போன் பயன்படுத்தும்போது சென்ஸரி நியூரல் லாஸ் எனப்படும் பாதிப்பு ஏற்பட்டு, காதுக்குள் இரைச்சல் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்.
  •  ஹெட்போன் பயன்படுத்துவதால் இளம் வயதிலேயே கேட்கும் திறன் பாதிக்கப்பட்டு காது நன்றாக கேட்பதற்கான மெஷின்களை பயன்படுத்த நேரிடும்.
  • ஹெட்போன்கள் அதிகளவில் பயன்படுத்துவதால் தலைவலி, தூக்கமின்மை, ஒவ்வாமை போன்ற சிக்கல்களை சந்திக்க நேரிடும். ம் மேலும் அதிக நேரம் ஹெட்போன் பயன்படுத்துவதால் சிந்திக்கும் திறன் மற்றும் ஞாபக சக்தி குறையும்.
  • வண்டி ஓட்டும்போது ஹெட்போன் பயன்படுத்துவதால் அதிகமாக விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது.
  • அதிக நேரம் ஹெட்போன் பயன்படுத்துவதால் காதில் இருந்து வெளியேறும் அழுக்குகள் சரியாக வெளியேறாமல் காதிலேயே தங்கி சீல், காது அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
  • இசை அதிர்வினால் செவி மடலும் காது வலி ஏற்படும்.
  • நீண்ட நேரம் ஹெட்போனf பயன்படுத்தினால் அதன் மூலம் உருவாகும் மின்காந்த அலைகள் உங்கள் மூளையின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
  •  பயணத்தின்போது ஹெட்போன்கள் உபயோகிப்பது உங்களுக்கு பயணத்தை எளிதாக்க ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. மற்ற நேரங்களை காட்டிலும் பயணத்தின்போது ஹெட்போன் உபயோகிப்பது இருமடங்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அப்படியென்றால் ஹெட்போன்களே பயனபடுத்தக்கூடாதாஉ என்று கேட்கிறீர்களா? இல்லை. காதுகளுக்கு வெளியே இருக்கும் படியான பெரிய ஹெட்போன்களை பயன்படுத்துவது நல்லது. சாலைகள் மற்றும் ரயில் தண்டவாளங்களை கடக்கும்போது ஹெட்போனை தவிர்த்திடுங்கள். ஒலி அளவை குறைத்து கேளுங்கள். உங்கள் ஹெட்போனை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். மேலும் அதிக நேரம் பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள்.

சார்ஜ் ஏற்றி கொண்டு போன் பேசுவது, இன்டர்நெட் பயன்படுத்துவது, ஹெட்போனில் பாடல் கேட்பது போன்ற பழக்கங்களை தவிர்ப்பது உங்களுக்கும், உங்களை சார்ந்தவர்களுக்கும் நல்லது.

ALSO READ | அடித்து நொறுக்கும் ப்ளூ காய்ச்சல்.. மக்களுக்கு இந்திய மருத்துவ கழகம் முக்கிய அறிவுரை