Thursday, May 25, 2023
HomeLifestyleHealthகருவளையம் நீங்கனுமா? முகம் பொலிவாகனுமா? ரொம்ப ஈசி..!

கருவளையம் நீங்கனுமா? முகம் பொலிவாகனுமா? ரொம்ப ஈசி..!

சருமத்தை பராமரிப்பதில் பெண்களுக்கு நிகர் பெண்களே ஆகும். அவர்களது சரும பராமரிப்பிற்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் காலங்களில் கோடைதான் முதன்மையானது ஆகும். அதிக வெப்பம், வெயில் காரணமாக முகப்பொலிவு பாதிப்பு, கண்களுக்கு கீழே கருவளையம் போன்றவை ஏற்படும். இதுபோன்றவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதை கீழே காணலாம்.

முகப்பொலிவுடன் இருப்பதற்கு:

  • பீட்ருட் சாறினை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து தண்ணீரால் கழுவினால் முகம் பொலிவு பெறும்.
  • தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், சருமம் சம்பந்தப்பட்ட பிரச்னை களைத் தவிர்க்கலாம்.
  • முகப்பரு மற்றும் கட்டிகள் வராது. இது ரத்தத்தை தூய்மையாக்கி சருமத்தைப் பளபளப்பாக்கும்.
  • பீட்ரூட்டை தோல் சீவி, துருவி, விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதில் சிறிது பார்லி பவுடர் மற்றும் லெமன் ஜுஸ் சிறிது சேர்த்து கலந்த இந்த பேஸ்ட்டை முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
  • பீட்ரூட்டை தோல் சீவி, துருவி, விழுதாக அரைத்து கைகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து நன்கு காய்ந்த பின்னர் கைகளை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து வாரம் 3 முறை செய்து வந்தால் கைகள் மென்மையாகும்.
    கருவளையம் நீங்க:
  • வெள்ளரி விதை பொடியுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் போல் குழைத்துத் தடவி வந்தால் ஒரே மாதத்தில் கறுமை காணாமல் போகும்.
  • வெள்ளரிக்காய் உடலுக்குக் குளுமை மட்டுமல்லை, முகத்திற்கு ஒளி தரக்கூடியது.
  • வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்தால், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி, கருவளையங்களும் நீங்கிவிடும்.
  • வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் அப்பிக்கொண்டு சில நிமிடங்களுக்கு பிறகு கழுவினால் முகச்சுருக்கங்கள் மறையும்.
  • மாசுமருவற்ற பளபளப்பான முகத்தைப் பெறத் தினமும் முகத்தில் வெள்ளரிக்காய் சாற்றைத் தடவ வேண்டும்.
  • வெள்ளரிக்காய் சாற்றில் முல்தானிமட்டி மற்றும் பால் சேர்த்துக் கலந்து முகத்தில் பூசிய பிறகுக் கழுவினால் வெயிலால் கருத்த முகம் பொலிவு பெற்று விடும்.
    மேலே கூறியவற்றை பின்பற்றினால் கருவளையம் நீங்கி முகம் கண்டிப்பாக பொலிவு பெறும்.

ALSO READ | காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது நல்லதா? கெட்டதா?