Saturday, May 27, 2023
HomeLifestyleHealthவெயில் காலத்தில் சருமம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமா..? பீட்ரூட் இருந்தாலே போதும்..!

வெயில் காலத்தில் சருமம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமா..? பீட்ரூட் இருந்தாலே போதும்..!

வெயில் காலம் தொடங்கிவிட்டதால் பொதுமக்கள் வெயிலில் இருந்து தப்பிக்க ஏராளமான முயற்சிகளை மேற்கொள்வோம். ஏனென்றால், வெயில் காலத்தில் பெரும்பாலானோர் சந்திக்கும் மிகப்பெரிய சிக்கல் சருமப்பிரச்சினை ஆகும்.

இதனால், சருமத்தை பராமரிக்க பல்வேறு நடைமுறைகளை நாம் கடைப்பிடிப்போம், அதில் கீழே உள்ள முறைகளை நாம் கடைபிடித்தால் நமது சருமம் எப்போதும் பொலிவுடன் இருக்கும். சருமம் பளபளப்பாக இருப்பதற்கு பீட்ரூட் முக்கிய காரணமாக இருக்கிறது. பீட்ரூட்டை எவ்வாறு எல்லாம் பயன்படுத்தினால் சருமம் பாதிக்கப்படாது என்பதை கீழே காணலாம்.

  • ஒரு பீட்ருட், ஒரு காரட், ஒரு தக்காளி, கொஞ்சம் கரு வேப்பிலை கொஞ்சம் இஞ்சி போட்டு அரைத்து தினமும் கப் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் இளநரை போய்விடும்.
    பீட்ருட் சாறினை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து தண்ணீரால் கழுவினால் முகம் பொலிவு பெறும்.
  • தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், சருமம் சம்பந்தப்பட்ட பிரச்னை களைத் தவிர்க்கலாம். முகப்பரு மற்றும் கட்டிகள் வராது. இது ரத்தத்தை தூய்மையாக்கி சருமத்தைப் பளபளப்பாக்கும்.
  •  பீட்ரூட்டை தோல் சீவி, துருவி, விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.
    இந்த விழுதில் சிறிது பார்லி பவுடர் மற்றும் லெமன் ஜுஸ் சிறிது சேர்த்து கலந்த இந்த பேஸ்ட்டை முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
  • பீட்ரூட்டை தோல் சீவி, துருவி, விழுதாக அரைத்து கைகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து நன்கு காய்ந்த பின்னர் கைகளை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து வாரம் 3 முறை செய்து வந்தால் கைகள் மென்மையாகும்.
    மேலே கூறிய முறையில் செயல்பட்டால் சருமம் பாதுகாப்பாக இருக்கும்.

ALSO READ | கொளுத்துகிறது வெயில்..! சம்மரில் குழந்தைகளுக்கு தர வேண்டிய பழங்கள் என்னெ்ன? பெற்றோர்களே படிங்க..!