ஒவ்வொரு தட்பவெப்ப காலநிலைக்கு ஏற்ப நமது உடலுக்கு நாம் மாறுபட்ட உணவுகளை அளிக்க வேண்டும். ஏனெ்னறால். ஊட்டச்சத்துக்கள் அல்லாத உணவுகள் வீண் சிக்கல்களை நமது ஆரோக்கியத்தில் ஏற்படுத்தி விடும். தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையிலும், பல இடங்களில் காய்ச்சல் பரவி வரும் நிலையிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
இதனால் கீழ்க்கண்ட உணவுகளை எப்போதுமே பெரும்பாலும் தவிர்ப்புது நல்லது.
பரோட்டா:
கடைகளில் சாப்பிடுவது என்றாலே பரோட்டாதான் பலரது முதல் தேர்வாக இருக்கும். பரோட்டா சாப்பிடுவது என்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று மருத்துவர்களே எச்சரிக்கின்றனர். ஏனென்றால், பரோட்ட செய்ய பயன்படுத்தப்படும் மைதா மாவில் வெண்மையாக்குவதற்கு சில ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இது நமக்கு நீரிழிவு நோய் வருவதற்கு காரணமாக அமைகிறது.
குளிர்பானங்கள்:
இன்று குளிர்பானங்கள் அருந்துவது அதிகரித்து வருகிறது. பழச்சாறுகள் குடிப்பதை காட்டிலும் குளிர்பானங்கள் அதிகளவில் அருந்துவதால் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு. குளிர்பானங்கள் தயாரிப்பில் குளுக்கோஸ், பிரக்டோஸ், காபின், கலருக்கான ரசாயனம் போன்ற மூலப்பொருள்கள் கலக்கப்படுகின்றன. அதை கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கும் முன் கேஸ் நிரப்பப்படுகிறது. இதுவும் வாயுநிலையிலான ஒரு வகை ரசாயனம் தான். இவை நமது உடலுக்குள் செல்லும்போது, உடலில் உள்ள பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் உடல் தசைகள் வலுவிழப்பதோடு, சிறுநீரகத்தையும் பாதிக்கிறது.
நூடுல்ஸ்:
சைன உணவுகளான ப்ரைட் ரைஸ், நூடுல்ஸ் இன்று தமிழ்நாட்டின் குக்கிராமம் வரை சென்றுவிட்டது. நூடுல்ஸ்களில் மெழுகு அல்லது லிக்விட் பாரஃபின் என்ற பொருள் நூடுல்ஸ் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருப்பதற்காக சேர்க்கப்படுகிறது. இவை வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவற்றை நமது உடலில் உறிஞ்சுகிறது. இதயம் சம்பந்தப்பட்ட நோய்களையும், அதிக இரத்த அழுத்தம், உடல்பருமன் போன்ற நோய்களையும் ஏற்படுத்துகிறது.
இதேபோல, ப்ரைட் ரைஸ், அதிக எண்ணெய் கொண்ட இனிப்புகள், கொழுப்புகள் நிறைந்த உணவுகள், தரமற்ற பொருட்களில் தயாரிக்கப்படும் உணவுகளும் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியது ஆகும்.
ALSO READ | உடல் வலிமையாக இருக்க வேண்டுமா..? இதையெல்லாம் இனி சாப்பிடுங்க..!