வயதுக்கேற்ற தோற்றம் இருப்பது என்பது இயற்கை அதை மாற்ற யாராலும் முடியாது. அதை மாற்றி அமைக்க நினைப்பது ஆரோக்கியத்திற்கு கேடாகவே அமையும். சிலர் வயதானாலும் சிறிய வயது போலவே தோற்றமளிப்பார்கள். அதற்கு காரணம் அவர்களது உணவு முறையே ஆகும். சிலர் வயதை விட முதிர்ச்சியான தோற்றத்தில் காட்சி அளிப்பார்கள். அதற்கு காரணம் உங்களிடம் இருக்கும் சில பழக்கவழக்கங்களே ஆகும். நமது ஆரோக்கியத்தை கெடுக்கும் சில பழக்கவழக்கங்கள் சருமத்தை கடுமையாக பாதிக்கும்.
மேக்கப்புடன் தூங்குவது:
பொது இடங்களுக்கு செல்வதற்கு முன் முகத்தில் மேக்கப்புடன் செல்வது பலரின் வழக்கம். ஆனால், அது எப்போதும் முகத்திலே இருப்பது சருமத்திற்கு ஆரோக்கியமல்ல. தூங்கும் முன் முகத்தை நன்றாக தண்ணீரில் கழுவ வேண்டும். உங்கள் மேக்கப்பை அகற்றாமல் படுக்கைக்குச் செல்வது உங்கள் சருமத் துளைகளை சுருக்கி முகப்பருவுக்கு வழிவகுக்கும்.
அதிக சர்க்கரை உட்கொள்ளல்:
நீங்கள் குடிக்கும் தேநீரில் அதிகப்படியான சர்க்கரை சாப்பிடுவது, உங்கள் சருமத்தில் பாதகமான விளைவை ஏற்படுத்தும். ஆதலால், நீங்கள் அதை கட்டுப்படுத்த வேண்டும். சர்க்கரை மூலக்கூறுகள் கொலாஜனின் கிளைகேஷனை ஏற்படுத்துகின்றன, மேலும் இந்த செயல்முறை விரைவான கொலாஜன் சிதைவுக்கு வழிவகுக்கிறது. இதனால், நீங்கள் விரைவில் வயதானவர்களாக தோற்றமளிக்கக்கூடும்.
அதிகளவில் உடலில் நீர் வெளியேறுதல்:
நீரிழப்பு பல உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உங்கள் முகத்தையும் சருமத்தையும் வயதானவர்களாக காட்டும். நீரிழப்பு தோலின் அறிகுறிகளை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் சருமத்தில் உள்ள ஈரப்பதம் குறைந்தாலும் சிக்கல் ஏற்படும். அதனால், தண்ணீர் போதுமான அளவு கட்டாயம் அருந்த வேண்டும்.
மது அருந்துதல்:
மது அருந்துவது உடலுக்கு பல தீங்கை ஏற்படுத்து உங்கள் சருமத்திற்கும் தீங்கு விளைவிக்கும், ஆல்கஹால் உங்கள் சருமத்திலிருந்து திரவங்களை வெளியேற்றுகிறது. இதனால் உங்கள் சருமம் வறண்டு போகும்
உங்கள் தோல் வகைகளுக்கு ஏற்ப மாய்ஸ்சரைசர்களை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். பெண்கள் ஜெல் அடிப்படையிலான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
தோல் சார்ந்த கிரீம்கள், மாய்ஸ்ரைசர்ஸ் பயன்படுத்தும் முன்னர் தோல் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது மிகவும் நல்லது.