ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்வதன் மூலம் உடல்நல கோளாறு ஏற்படுவதை பெருமளவு தவிர்க்க முடியும். மேலும் இவ்வாறு செய்வதால் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். நியூட்ரியன்ட் மற்றும் ஆன்டி-ஆக்சிடண்ட்கள் அதிகம் நிறைந்த உண்வுகளை சாப்பிட்டால், காற்று மாசு மூலம் ஏற்படும் பாதிப்புகளை குறைத்து நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
அதிக மாசு நிறைந்த காற்றை சுவாசிக்கும் போது உடல் பாதிப்புகள் அதிகமாவதோடு, நுரையீரல் புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தும். மேலும் பாதிப்பு அதிக தீவிரம் ஆகும் பட்சத்தில் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.
நுரையீரல் பாதிப்புகளை வீட்டில் இருந்தபடி சந்தையில் கிடைக்கும் சிலவகை பழம் மற்றும் காய்கறிகளை உட்கொண்டே தவிர்க்கவும், சரி செய்யவும் முடியும். அந்த வகையில் நுரையீரல் பாதிப்புகளில் சிக்காமல் இருக்க, ஆண்டி-ஆக்சிடண்ட்கள் அதிகம் நிறைந்த உணவு வகைகள் என்ன என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
Also Read: இதயத்தை பத்திரமாக பாத்துக்க இதை மட்டும் செய்தால் போதும்!
பீட்ரூட்
நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள் பீட்ரூட் அதிகம் உட்கொண்டால் நுரையீரல் செயல்பாடுகள் ஊக்குவிக்கப்பட்டு உடல்நலனில் முன்னேற்றம் ஏற்படும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. பீட்ரூட் மட்டுமின்றி அதன் இலைகளிலும் (beet greens) நுரையீரல் செயல்பாடுகளை மேம்படுத்தும் தன்மை உள்ளன.
ஆப்பிள்
இந்த பழத்தில் அதிக பைபர் மற்றும் குறைந்த அளவில் கலோரிக்கள் உள்ளன. மேலும் இதில் சுவாச குழாயை சீராக வைத்து கொள்ள வழி வகுக்கும் விட்டமின் மற்றும் பிளேவனாய்டுகள் உள்ளன. மேலும் இதில் உள்ள ஒருவகை பிளேவனாய்டு நுரையீரலை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது.
காய்கறிகள்
ப்ரோகோலி, முட்டை கோஸ், காலிஃபிளவர், கேல் உள்ளிட்டவை அதிக ஆரோக்கியம் வழங்கும் உணவுகள் ஆகும். இவற்றில் உள்ள ஆண்டி-ஆக்சிடண்ட்கள் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இந்த காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் சுவாச பிரச்சனைகள் நீங்கும்.
மிளகு
மிளகில் அதிகளவு விட்டமின் சி நிறைந்துள்ளது. இதனை தொடர்ச்சியாக உணவில் சேர்த்து கொள்ளும் போது நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். விட்டமின் சி உட்கொண்டால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற முடியும். இவவ்வாறு செய்வதால் நுரையீர் பாதிப்பு குறைகிறது.
பூசனிக்காய்
நுரையீரல் ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ளும் தன்மை பூசனிக்காயில் அதிகளவு நிறைந்துள்ளது. இதில் அதிகளவு கரோடினாய்டுகள் உள்ளன. இது நுரையீரல் செயல்பாடுகளை எப்போதும் சீராக வைத்துக் கொள்ளும்.