Monday, March 27, 2023
HomeLifestyleHealthசிறய இஞ்சி துண்டில் இத்தனை நன்மைகளா?

சிறய இஞ்சி துண்டில் இத்தனை நன்மைகளா?

உணவில் இஞ்சியை சேர்த்து கொண்டால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என எல்லோரும் கேள்விப்பட்டு இருப்போம். இஞ்சியை சில உணவுகளில் சரியான விகிதத்தில் சேர்த்து கொண்டால், குறிப்பிட்ட உணவின் ருசி அலாதியாகும் என்றும் அனைவருக்கும் தெரியும்.

இவற்றை தாண்டி இஞ்சி நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் என தெரியுமா? நம் உடலில் இஞ்சி எப்படி எல்லாம் மருந்தாகிறது என தொடர்ந்து பார்ப்போம்.

மற்ற உணவு வகைகளை விட இஞ்சியில் அதிகளவு ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது உடலில் சர்க்கரை நோய், பக்கவாதம் மற்றும் புற்றுநோய் ஏற்பட காரணமாக இருக்கும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும். இது 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டு இருக்கிறது.

அழற்சியை நீக்கும் தன்மை இஞ்சியில் ஏராளம். இது மாரடைப்பு மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்றவை ஏற்படுவதை தடுக்க உதவும். அதிகளவு முட்டி வலி கொண்டவர்கள் ஆறு வாரத்திற்கு தினமும் இரண்டு முறை இஞ்சி சாறு குடித்ததால், வலி குறைந்ததாக 2001 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

Also Read: பீர் குடிப்பது உடலுக்கு சாதகமா , பாதகமா ?

குமட்டல் மற்றும் வாந்தியை கட்டுப்படுத்துவதில் இஞ்சியை வேறு எந்த உணவும் மிஞ்ச முடியாது. கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு குமட்டல் ஏற்படும் போது மிகவும் பாதுகாப்பான உணவு இது. தினமும் 250 மில்லி கிராம் இஞ்சி மாத்திரைகளை உட்கொண்டவர்களுக்கு குமட்டல் குறைந்ததாக கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

மாதவிடாயின் போது பெண்களுக்கு ஏற்படும் வலியை குறைப்பதில் இஞ்சி சிறப்பாக வேலை செய்யும். இதில் உள்ள ரசாயணங்கள் வலி நிவாரணியாக செயல்படும். மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்த இஞ்சி சரியான உணவு ஆகும்.

இஞ்சியை அன்றாட உணவில் எப்படி சேர்த்து கொள்வது

  • மசாலா டீயுடன் இஞ்சியை கலந்து பருகலாம்
  • பொறியல் மற்றும் குழம்புகளில் சிறிது சிறிதாக நறுக்கிய இஞ்சியை சேர்க்கலாம்
  • மோரில் இஞ்சி பொடியை சேர்த்து கொள்ளலாம்
  • சூடான தண்ணீரில் இஞ்சியை சேர்த்து குடிக்கலாம்.