Monday, May 22, 2023
HomeLifestyleகருஞ்சீரகத்தில் இத்தனை நன்மைகளா?

கருஞ்சீரகத்தில் இத்தனை நன்மைகளா?

நம் உடலுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்துவதில் கருஞ்சீரகம் பெரும் பங்கு வகிக்கிறது. கருஞ்சீரகத்தில் பல்வேறு ஆரோக்கிய பலன்கள் நிறைந்துள்ளது. இது ஆங்கிலத்தில் ‘black cumin’ என்று அழைக்கப்படுகிறது. இதற்க்கு கலோஞ்சி என்று இன்னொரு பெயரும் உள்ளது.

கருஞ்சீரகத்தில் உள்ள ஆரோக்கிய பலன்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஆண்டி ஆக்சிடண்ட்கள்

உடலுக்கு நன்மையை வழங்குவதில் ஆண்டி ஆக்சிடண்ட்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. பல்வேறு ஆய்வுகளில் ஆண்டி ஆக்சிடண்ட்கள் உடலில் புற்றுநோய், நீரிழிவு, இதய பாதிப்பு மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்க செய்கிறது.

Health Benefits of karunjeeragam

கொலஸ்ட்ரால்

அன்றாட உணவுகளில் கருஞ்சீரகத்தை சேர்த்து கொண்டால், உடலில் கொலஸ்டிரால் அளவு குறையும். இதனால் இதயம் சார்ந்த பாதிப்பு குறையும். இதுவரை மேற்கொள்ளப்பட்ட 17 ஆய்வுகளில் கருஞ்சீரகம் எடுத்துக் கொண்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு அளவு குறையும் என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

புற்றுநோய்

உடலில் புற்றுநோய் உண்டாக செய்யும் தீயவைகளை வளர விடாமல் செய்யும் தன்மை கருஞ்சீரகத்தில் அதிகம் நிறைந்துள்ளது. டெஸ்ட்-டியூப் ஆய்வுகளில் புற்றுநோயை தடுக்கும் தன்மை கருஞ்சீரகத்தில் அதிகம் நிறைந்துள்ளது கண்டறியப்பட்டு இருக்கிறது.

புற்றுநோய் மட்டுமின்றி வயிறு, நுரையீரல், சருமம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை ஏற்பட விடாமல் தடுக்கும் தன்மை கருஞ்சீரகத்தில் உள்ளது.

Health Benefits of karunjeeragam

பாக்டீரியா

உடலில் தீய பாதிப்பை ஏற்படுத்துவதில் பாக்டீரியா அதிக பங்காற்றுகிறது. இதன் காரணமாக நுமோனியா போன்ற பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. கருஞ்சீரகத்தில் உள்ள நோய் எதிர்ப்பு தன்மை சிலவரை பாக்டீரியாக்களை கொல்லும் திறன் கொண்டுள்ளது.

வீக்கம்

உடலில் காயம் மற்றும் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க முயற்சிக்கும் போது வீக்கம் ஏற்படும்.

தினமும் 1000 மில்லி கிராம் அளவு கருஞ்சீரகத்தை எட்டு வாரங்கள் உட்கொண்டால் உடலில் வீக்கம் மற்றும் அழுத்தம் சார்ந்த பிரச்சினைகளை குறைக்க முடியும். இதுதவிர கருஞ்சீரகத்தில் கணைய புற்றுநோய் செல்களை குறைக்கும் தன்மை நிறைந்துள்ளது.

கல்லீரல்

நம் உடலில் மற்ற பாகங்களை விட கல்லீரல் அதிக முக்கியமான ஒன்றாகும். இது உடலில் உள்ள தீயவைகளை வெளியேற்றி உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்க செய்கிறது.

உணவில் கருஞ்சீரகத்தை சேர்த்து கொண்டால் கல்லீரலில் ஏற்படும் பாதிப்பு வெகுவாக குறையும் என பல்வேறு ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. கல்லீரல் மட்டுமின்றி கருஞ்சீரகம் உட்கொண்டால் சிறுநீரக பாதிப்புகளும் குறையும்.

இரத்த ஓட்டம்

உடல் இரத்தத்தில் அதிக சர்க்கரை இருப்பின் அதிக தாகம், திடீர் உடல் எடை குறைவு, சோர்வு மற்றும் கவனக்குறைவு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். இவற்றை சரியாக கவனிக்காமல் இருப்பின் பல்வேறு தீய பாதிப்புகள் ஏற்படும். இதனால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, பார்வை குறைபாடு மற்றும் காயங்கள் விரைவில் சரியாகாமல் போகவும் வாய்ப்புகள் உள்ளன.

அல்சர்

மனிதர்களிடத்தில் அல்சர் அதிக வலி ஏற்படுத்தும் நோய் ஆகும். உடலில் ஏற்படும் அல்சர் வயிற்றினுள் உள்ள பாதுகாப்பு மண்டலத்தை அழிக்கும். பல்வேறு ஆய்வுகளில் கருஞ்சீரகத்தை உட்கொண்டால் வயிற்று பகுதியில் ஏற்படும் அல்சர் தவிர்க்க செய்கிறது.

கருஞ்சீரகத்தை எப்படி சாப்பிடுவது:

கருஞ்சீரகத்தை லேசாக வறுத்து பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். இரவு உணவுக்கு பின் சிறிதளவு(1 pinch) கருஞ்சீரகத்தை வெது வெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். இதை குடித்த பின் வேற எந்த உணவும் அருந்த கூடாது.

கருஞ்சீரகம் + வெந்தியம் + ஓமம் – சம அளவு எடுத்து லேசாக வறுத்து பொடி செய்தும் வைத்து கொள்ளலாம். இதை இரவு உணவுக்கு பின் 1 டீஸ்பூன் வெது வெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம்.

முக்கிய குறிப்பு: இதை வருட கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது. ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் மட்டுமே இதை சாப்பிட வேண்டும். அதன் பிறகு ஒரு வருடத்திற்கு இதை சாப்பிட வேண்டிய தேவை கிடையாது.

யார் சாப்பிடக்குடாது:

  • கர்ப்பிணி பெண்கள்
  • குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்கள்
  • Cytochrome p450 substrate போன்ற மருந்துகள் சாப்பிடுவோர் கருஞ்சீரகத்தை சாப்பிட கூடாது.
  • லோ பிரஷர், லோ சுகர் உள்ளவர்கள் கருஞ்சீரகத்தை மிக குறைந்த அளவு எடுத்துக்கொள்வது நல்லது.
  • இரத்தம் உறைநிலை பிரச்சனை உள்ளவர்கள் கருஞ்சீரகத்தை தவிர்த்தல் நல்லது.