Saturday, March 25, 2023
HomeLifestyleHealthமுடி கொட்டிக்கிட்டே இருக்குதா…? இதோ தீர்வு கிடைச்சாச்சு…! கவலையை விடுங்க..

முடி கொட்டிக்கிட்டே இருக்குதா…? இதோ தீர்வு கிடைச்சாச்சு…! கவலையை விடுங்க..

இன்றைய தலைமுறையினர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக முடி உதிர்வு உள்ளது. அதை சரிசெய்வதற்கான பல்வேறு எண்ணெய்களை பயன்படுத்தி தலைமுடியை பறிகொடுக்கும் பரிதாபத்திற்கும் பலர் தள்ளப்படுகின்றனர்.

முடிக்கு மிகச்சிறந்த எண்ணெய்களாக சொல்லப்படும் ஐந்து வித எண்ணெய்கள் கூந்தலை அருமையாக வைத்திருக்க செய்யும் . இவை ஒவ்வொன்றுமே தனித்துவமானவை. அந்த எண்ணெய்கள் பற்றி கீழே காணலாம்.

கூந்தல் உதிர்தல் என்பது மோசமான ஒன்று. ஒவ்வொரு நாளும் முடி உதிர்தலை எதிர்கொள்ளும் போது அது மன உளைச்சலை உண்டாக்கும். தினசரி 100 முடிகள் உதிர்வது என்பது இயல்பானது.

முடிக்கு பயன்படுத்தகூடிய எண்ணெய் வகைகள்

தேங்காய் எண்ணெய் – 50 மில்லி
பாதாம் எண்ணெய் – 50 மில்லி
ஆலிவ் எண்ணெய் – 50 மில்லி
விளக்கெண்ணெய் – 25 மில்லி
ரோஸ்மேரி எண்ணெய் – 10 துளி

அனைத்தையும் கலந்து ஒரு பாட்டிலில் வைத்துகொள்ளுங்கள். வாரம் இருமுறை அல்லது தலைகுளியலின் போது நன்றாக முடியில் தடவி மசாஜ் செய்து குளியுங்கள். தினமும் 5 சொட்டு எடுத்து உச்சந்தலையில் மென்மையாக மசாஜ் செய்யுங்கள். படிப்படியாக முடி உதிர்வதை குறைவதை பார்க்கலாம்.

ஆண்கள், பெண்கள் இருவரும் இந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம். கூந்தலில் பொடுகு. இளநரை, செம்பட்டை நிறம், மெலிந்த முடி போன்ற அனைத்து பிரச்சனைகளையும் ஓவ்வொரு எண்ணெயும் சேர்த்து பயன்படுத்தும் போது குணப்படுத்த செய்கிறது.

தேங்காய் எண்ணெய்:

தேங்காயெண்ணெய் பாரம்பரியமானது. தேங்காய் எண்ணெயை கொண்டு தவறாமல் மசாஜ் செய்வது, முடிக்கு ஊட்டமளிக்கும். புரத இழப்பை குறைக்கும். உச்சந்தலை சருமத்தை மென்மையாக்குகிறது மற்றும் முடியை ஆழமாக ஈரப்பதமாக்குகிறது. கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்க நினைப்பவர்கள் தேங்காய் எண்ணெயை வீட்டிலேயே காய்ச்சி பயன்படுத்தலாம்.

நல்லெண்ணெய்:

இது உடல் உஷ்ணத்தை தணிக்கும். கூந்தல் உதிராமல் தடுக்கும். ஊட்டச்சத்து அளிக்கும். கருமையாக வைத்திருப்பதில் இதற்கு தனி மகத்துவம் உண்டு. நல்லெண்ணெய் முடியை வலுப்படுத்துவதால் முடி உதிர்வு பெருமளவு தடுக்கப்படும்.

பாதாம் எண்ணெய்:

பாதாம் எண்ணெய் அற்புதமான நன்மைகளை கொண்டது. இது உலர்ந்த கூந்தல் நுனியை சரி செய்யும். பாதாம் எண்ணெய் உங்கள் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைக்கும். மயிர்க்கால்களை வலுபடுத்தும். கூந்தல் வறட்சியை போக்கு சேதத்தை சரி செய்யும். பாதாம் எண்ணெயில் அதிக அளவு வைட்டமின் ஈ உள்ளது. இது இயற்கையான ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இது முடி உதிர்வு தடுக்கிறது. முடி உதிர்வதை கட்டுப்படுத்துகிறது. முடிக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது.

விளக்கெண்ணெய்:

விளக்கெண்ணெய் வாசனையால் கூந்தலின் நறுமணம் கெட்டுவிடும் என்பதால் யாரும் விரும்புவதில்லை. ஆனால், விளக்கெண்ணெயில் ஆக்ஸிஜனேற்றிகள், புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைவாக உள்ளன. இது உச்சந்தலைக்கு ஊட்டமளிக்கிறது. மேலும் முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. முடியை வலுப்படுத்துவதோடு, முடி உதிர்வதையும் தடுக்கிறது. உஷ்ணத்தால் முடி உதிர்தலை தடுக்க இதுதான் சிறந்தது என்று சொல்லலாம். எனினும் இது குளிர்ச்சி என்பதால் உங்கள் உடல்நலனுக்கு ஏற்றபடி பயன்படுத்துங்கள்.

ஆலிவ் எண்ணெய்:

ஆலிவ் எண்ணெய் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் அல்லது டி.ஹெச்.டி. என்னும் ஹார்மோனை உச்சந்தலையில் பிணைப்பதை தடுக்கிறது. இது முடி உதிர்வதை குறைக்க செய்கிறது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது தலைமுடி வழுக்கை ஆவதை உண்டாக்கும் அலோபிசியா அரேட்டாவை தடுக்கிறது.

இருப்பினும் தொடர்ந்து முடி உதிர்வு அதிகளவில் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது ஆகும்