நமது அன்றாட வாழ்க்கை முறை , உணவு பழக்கம் போன்றவையால் பல பாதிப்புகளுக்கு ஆளாகிறோம். அதில் ஒன்று தான் இந்த கீல்வாதம். இந்த நோய் வருவதற்கான காரணம், தவிர்க்கப்பட வேண்டிய உணவுகளைப் பற்றி விளக்குகிறது இந்த கட்டுரை.
கீல்வாதம்(Gout) என்பது ரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் ஏற்படுகிறது. இப்படி அதிகரிக்கும் போது யூரிக் அமிலத்தின் படிகங்களானவை மூட்டுகளை சுற்றி உள்ள பகுதிகளில் படிகின்றன. இதனால் வலி மற்றும் வீக்கம் ஏற்படுகின்றது.
ப்யூரின் அதிகம் உள்ள உணவுகளை நம் உடல் ஜீரணிக்கும் போது வெளியேறும் கழிவே யூரிக் அமிலம். ஆல்கஹால், கூல்ட்ரின்க்ஸ், ஆட்டு இறைச்சி, ஈரல் மற்றும் கிட்னி போன்ற உறுப்பு இறைச்சிகளில் ப்யூரின் அளவு அதிகமா உள்ளது.
கீல்வாதம் யாரை அதிகம் தாக்குகிறது
கீல்வாதம் பெரும்பாலும் நடுத்தர வயது மற்றும் மாதவிடாய் நின்ற பெண்களை அதிகமா தாக்குகிறது. நல்ல அரோயோக்யமாக இருப்பவர்களின் உடலில் இருக்கும் அதிகப்படியான யூரிக் அமிலத்தை உடல் வெளியேற்றி விடும். ஆனால் தைரொய்ட், சிறுநீரக ப்ரிச்சனை உள்ளவர்களின் உடல் யூரிக் அமிலத்தை சரியாக வெளியேற்ற முடியாமல் மூட்டுகளில் உப்பு படிமனாகா படிந்து விடுகிறது.
இது பொதுவாக பெருவிரல் மூட்டுகளையே அதிகம் பாதிக்கிறது. இருப்பினும் கணுக்கால், முழங்கால், மணிக்கட்டு, முதுகுத்தண்டு, கைவிரல் போன்ற பிற மூட்டுகளையும் பாதிக்கிறது.
கீல்வாதத்தை தூண்டும் காரணங்கள்:
குறிப்பிட்ட சில உணவுகள், மருந்துகள் மற்றும் உடல் நிலையை பொறுத்து இந்த நோய் உண்டாகுகிறது.
மாட்டிறைச்சி, ஆட்டு இறைச்சி, கடல் சிப்பி, சால்மன் மீன், சோடா, ஆல்கஹால் போன்ற ப்யூரின் அதிகம் நிறைந்த உணவுகள் மற்றும் பானங்கள் மூலம் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
ஆஸ்பிரின், டையூரிடிக்ஸ், இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள் ஆகியவையும் இந்த நோய் உண்டாக காரணமாக அமைகிறது.
உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், நீரிழிவு நோய், சிறுநீரக கோளாறு போன்றவைகளும் கீல்வாதம் உண்டாக காரணிகளாக அமைகிறது.
எந்த உணவு சிறந்தது:
செர்ரி போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகள் கீல்வாத தாக்குதல்களைக் குறைப்பதாக சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இதில் இன்னொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் ப்யூரின் அளவு அதிகம் உள்ள காய்கறிகளை எடுத்துக்கொள்ளும் போது இந்த நோய் தாக்குவது இல்லை.
இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்பது சிறந்தது. பொதுவாக இறைச்சியில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. கீல்வாதத்துக்கு இறைச்சியை தவிர்க்க வேண்டிய காரணத்தினால் பாலக் கீரை (Spinach) போன்ற சைவ உணவை எடுத்துக்கொள்ளலாம். மேலும் பட்டாணி, காலிபிளார், காளான் போன்றவைகளும் சாப்பிடலாம்.
இருப்பினும் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் காலிபிளாரை தவிர்க்க வேண்டும் . ஆகையால் உங்கள் தனிப்பட்ட அறிகுறிகளை வைத்து மருத்துவர் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுவது நல்லது.
கீல்வாதம் வரமால் தடுக்க :
- பீர், வைன், சோடா, கூல்ட்ரின்க்ஸ் போன்றவைகளை தவிர்க்க வேண்டும்.
- சிகப்பு இறைச்சிகளை (Red Meat) தவிர்க்க வேண்டும் .
- புகை பிடிப்பதை தவிருங்கள்.
- உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
- உடற்பெயர்ச்சி மேற்கொள்ளுங்கள்.
- உடலில் தண்ணீர் வற்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.