இன்றைய காலத்தில் உணவுப்பழக்கவழக்கத்தாலும், நமது வாழ்க்கை முறையினாலும் நமது ஆரோக்கியம் மற்றும் உடல்சார்ந்த விஷயங்கள் பெரிளவில் மாற்றத்தை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, இன்றைய காலத்தில் பதின்ம வயதுகளில் பெண்கள் பருவமடைவதை காட்டிலும், 10 வயதுக்கு முன்பாகவே பருவமடைவது அதிகரித்து வருகிறது.
பருவம் அடைதல்:
இதற்கு உணவுப்பழக்க வழக்கங்கள் முக்கிய காரணம் ஆகும். முன்கூட்டியே அதாவது சிறுமிகளாக இருக்கும்போதே பருவமடையும் பெண்கள் மீது பெற்றோர்கள் சற்று கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். அவர்கள் முன்கூட்டியே பருவமடைவதற்கு அதிக கொழுப்பு, மருந்துகள், ஹார்மோன் இருக்கும் உணவுகள், ஜங்க் ஃபுட் போன்றவை காரணமாக இருக்கலாம்.
முன்கூட்டியே பருவம் அடைந்தாலும் இந்த குழந்தைகள் மனதளவில் குழந்தைகள் தான். உடலளவில் பெரியவர்களாக இருப்பார்கள். மிகச்சிறு வயதில் பருமடையும் பெண் குழந்தைகள் வளர்ச்சி குறையும். இத்தகைய குழந்தைகள் பிற்காலத்தில் பல ஆரோக்கிய குறைபாடுகளை சந்திக்க கூடிய வாய்ப்புகள் உண்டு.
பாதிப்புகளுக்கான வாய்ப்புகள்:
12 வயதுக்கு பிறகு வரக்கூடிய வளர்ச்சிகள் குறையலாம். முன்கூட்டிய பருமடைதலில் இவர்கள் 12 வயதுக்கு பிறகு போதிய உயரம் இல்லாமல் போவதற்கு வாய்ப்புகள் உண்டு. மேலும், இந்த குழந்தைகளின் எடையும். பிஎம் ஐயும் அதிகரிக்க வாய்ப்புண்டு.
இரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு. ஆனாலும், எதிர்காலத்தில் பெண்களாக வளர்ந்த பிறகு அதாவது திருமணத்திற்கு தயாரான பிறகு இவர்களது பாலியல் வாழ்க்கை, கருத்தரித்தலில் எந்த சிக்கலும் இருக்காது.
குழந்தைகளாகவே இருப்பதால் இவர்கள் சந்திக்கும் பெரிய சிக்கல் மாதவிடாய் காலத்தில் உதிரபோக்கு கையாள்வதுதான். இங்குள்ள, சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்களால் இது மறைமுக அழுத்தத்தை மனதில் உண்டாக்குகிறது.
நம்பிக்கை, புரிதல் தேவை:
முன்கூட்டியே பருவம் எய்திய பல குழந்தைகள் மாதவிடாய் என்பதை புரிந்துகொள்ளும் பக்குவம் வருவதற்குள் குழந்தைப்பருவத்தை, அனுபவிக்க முடியாமல் உடலில் உண்டாகும் மாற்றங்களையும் புரிந்துகொள்ள முடியாமல் திணறுகிறார்கள் என்பதே உண்மை. இந்த மன அழுத்தமானது வெவ்வேறு வழிகளில் அவர்களது வளர்ச்சியையும், கல்வியையும் பாதிக்க வாய்ப்புள்ளது. இதுபோன்ற தருணங்களில் பெற்றோர்கள் மிகுந்த பக்கபலமாக இருக்க வேண்டும். குறிப்பாக, தாய்மார்கள் உறுதுணையாக இருந்து நம்பிக்கையையும், புரிதலையும் ஏற்படுத்த வேண்டும்.
அப்போதுதான் அவர்கள் தேவையற்ற மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும்.
ALSO READ | பெற்றோர்களே, மணமக்களே.. திருமணம் எந்த காலகட்டத்தில் எல்லாம் செய்யக்கூடாது தெரியுமா..?