முட்டை அதிகம் சாப்பிட விரும்புபவரா நீங்கள்? சமீப காலங்களில் பெரும்பாலான உணவகங்கள் மற்றும் சந்தைகளில் வாத்து முட்டைகள் அதிகம் கிடைக்க துவங்கி இருக்கின்றன.
இவை வழக்கமான கோழி முட்டைகளை விட 50 சதவீதம் அளவில் பெரியதாக இருக்கின்றன. மேலும் இதில் பெரிய அளவில் தங்க நிறம் சார்ந்த மஞ்சள் கரு அதிக சுவையை வழங்குகிறது. இந்த முட்டை ஓடுகளும் பார்க்க அழகாக இருக்கின்றன. இந்த முட்டை ஓடுகள் பேல் புளூ, புளூ கிரீன், சார்கோல் கிரே மற்றும் ஒகேஷனலி வைட் போன்ற நிறங்களை கொண்டுள்ளன.
தோற்றம், சுவை மட்டுமின்றி வாத்து முட்டைகளில் உடலுக்கு நன்மை பயக்கும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
Also Read: கடக்நாத் எனும் கருங்கோழியில் அப்படி என்ன ஸ்பெஷல்.. வாங்க ஒரு புடி புடிப்போம்!
முட்டைகள் பெரும்பாலும் அதிக ப்ரோடீன் நிறைந்த உணவு வகை ஆகும். இவை உடலுக்கு தேவையான அமினோ ஆசிட்களை உடலுக்கு வழங்குகின்றன. இதில் உள்ள மஞ்சள் கரு அதிக கொழுப்பு மற்றும் கொலஸ்டிரால் உடன் பல்வேறு விட்டமின் மற்றும் மினரல்களை கொண்டுள்ளது.
வழக்கமான கோழி முட்டைகளை விட வாத்து முட்டையில் அதிக பலன்கள் கொண்டுள்ளன. வாத்து முட்டையின் அளவே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. வாத்து முட்டை குறைந்தபட்சம் 70 கிராம் எடை கொண்டவை ஆகும். கோழி முட்டை 50 கிராம் எடை கொண்டவை ஆகும்.
ஆரோக்கிய பலன்கள்
முட்டைகளை உணவில் சேர்த்து கொண்டால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதுடன் பல்வேறு உடல் உபாதைகளை தவிர்க்கவும் முடியும். இதில் உள்ள ஆண்டி-ஆக்சிடண்ட்கள் வயதீனம் காரணமாக ஏற்படும் உடல்நல கோளாறுகளை தவிர்க்க உதவுகிறது.
வாத்து முட்டையில் உள்ள கரோடீன், க்ரிப்டோசேந்தின் போன்றவை அஜீரணம், இதய கோளாறு மற்றும் சிலவகை புற்று நோய் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கிறது.
வாத்து முட்டையின் மஞ்சள் கருவில் லெசிதின் மற்றும் கோஹ்லின் உள்ளிட்டவை மூளை வளர்ச்சி, நரம்பு மண்டலத்திற்கு வலு சேர்கும் தன்மை கொண்டவை ஆகும். மேலும் கருவுற்ற பெண்கள் வாத்து முட்டை சாப்பிட்டால் கருவின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.
அலர்ஜிக்கள்
முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் பொதுவான அலர்ஜி குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு அதிகம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. முட்டை உட்கொள்ளும் போது சிலருக்கு சரும கோளாறு, அஜீரனம், குமட்டல் போன்றவை பொதுவாக ஏற்படுகின்றன.
வாத்து முட்டையில் அதிக கொலஸ்டிரால் இருப்பதால் சிலருக்கு இதய கோளாறுகளை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. எனினும், இது இதயம் சார்ந்த பாதிப்புகளை அதிகப்படுத்தும் என இதுவரை எந்த ஆய்வுகளிலும் நிரூபிக்கப்படவில்லை.
மேலும் குழந்தைகள், சிறுவர்கள், கருவுற்ற பெண்கள், வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் வாத்து முட்டை உட்கொள்வதை அதிகம் தவிர்க்கலாம். மேலும் இவர்கள் முறையாக சமைக்கப்படாத முட்டைகளை உட்கொள்ள கூடாது.