Monday, March 27, 2023
HomeLifestyleஇனிக்கும் உதடுகள் வறண்டு போகிறதா? இனிமே இதை ஃபாலோ பண்ணுங்க

இனிக்கும் உதடுகள் வறண்டு போகிறதா? இனிமே இதை ஃபாலோ பண்ணுங்க

நமது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால், சருமம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவே உதடுகள் அடிக்கடி வறண்டு போகின்றன. நமது உடலின் மற்ற பகுதிகளில் உள்ள தோலை விட உதடுகளில் உள்ள தோல் மிகவும் மென்மையானது. இதன் காரணமாகவே, உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், உதடுகளில் பெரியளவு பாதிப்பு தெரியும். உதடுகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நமக்கு பெரியளவு கவலையை ஏற்படுத்தும்.

பொதுவாக குளிர்காலத்தில் உதடுகளில் வெடிப்பு அதிகமாக காணப்படும். நீரிழப்பு அல்லது உடலில் போதுமான நீர் இல்லாத நிலைகளிலும் இது ஏற்படலாம். உங்களுடைய உதடுகளும் வறண்டு போகிறது என்றால் கவலைப்பட வேண்டாம். கீழ்க்கண்ட முறையில் எளிதில் சரி செய்யலாம்.

தேன்

வறண்டு போன உதடுகளில் தேனை தடவினால் நல்ல பலன் கிடைக்கும். தேனில் பல மருத்துவ குணங்கள் உள்ளதை நாம் அறிவோம். தேன் ஒரு இயற்கை மாய்ஸ்சரைசராகவும் அறியப்படுகிறது. சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து, எப்போதும் உதட்டுப்பகுதியை ஈரமாகவே வைத்துக் கொள்கிறது.

ஆமணக்கு எண்ணெய்

தேங்காய் எண்ணெய் இல்லாவிட்டால் ஆமணக்கு எண்ணெய் கூட உதட்டில் பயன்படுத்தலாம. பல்வேறு சத்துக்கள் நிறைந்த ஆமணக்கு எண்ணெய் உதடுகளுக்கு மிகவும் நல்லது. இயற்கையான மாய்ஸ்சரைசராகவும் இது செயல்படுகிறது.

கற்றாழை

சரும பராமரிப்பிலும், அழகு பராமரிப்பிலும் கற்றாழையின் பங்கு அளப்பரியது. தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் கைகொடுக்கிறது. கற்றாழை ஜெல்லை உதடுகளில் தடவுவது இறந்த செல்களை அகற்றி, சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி, ஈரப்பதத்தைத் தக்கவைக்கும். இது மிகவும் இயற்கையான தீர்வுகளில் ஒன்றாகும்.

தேங்காய் எண்ணெய்

வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் வைத்திருந்தால், அதை உங்களுடைய உதடுகளில் தொடர்ந்து தடவி வாருங்கள். காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு சாப்பாட்டுக்கு பிறகு இப்படி செய்யுங்கள். இதன்மூலம் நீண்ட நேரம் உங்களுடைய உதட்டில் தேங்காய் எண்ணெய் இருக்கும். இதனால் வெடிப்பு ஏற்படுவது குறைந்து, உதடுகள் இயல்புநிலைக்கு திரும்பும்.