வெயில் காலம் வெளுத்து வாங்கி வருகிறது. மக்கள் வியர்த்து விறுவிறுக்க அங்குமிங்கும் ஓடி வருகின்றனர். இந்த நிலையில், கோடை காலத்தில் என்னென்ன ஆடைகள் அணிய வேண்டும் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். ஏனெ்னறால், கோடை காலத்தில் நீங்கள் அணியும் ஆடைகள் உங்களின் உடலில் வெப்ப நிலையை கட்டுப்படுத்தும்.
என்ன ஆடைகள் அணியலாம்?
- இந்திய காட்டன் உடைகளில் பல வகைகள் இருந்தாலும் கோடைக்காலத்தில் பயன்படுத்தவும், அணியவும் சிறந்த துணி வகையாக காதி விளங்குகிறது.
- கோடைக்காலத்திற்கு எப்போதும் முதன்மையான தேர்வு பருத்தியால் ஆன ஆடைகளே ஆகும். நாம் அணியும் உடைகள் இதமானதாக இருக்க வேண்டுமானால் அதற்கு பருத்தி ஆடைகளே சிறந்தது.
- நமது உடலை குளிர்ச்சியுடன் வைத்திருக்கும் ஆற்றலை பருத்தி ஆடைகள் கொண்டுள்ளது.
- சூரிய வெயிலில் வெளியே செல்லும்போது தளர்வான, மென்மையான நிறங்களை கொண்ட ஆடைகள் அணியலாம்.
- கோடை காலத்தில் வெள்ளை நிற ஆடைகள் அணிவது அதிகம் பலனளிக்கும்.
- கோடைக்காலத்தில் அனைவருக்கும் இதமான ஆடையாக பருத்தி விளங்குகிறது.
- அதேபோல கோடை காலத்தில் லினன் மற்றும் சணல் இழை ஆடைகள் அணியலாம்.
என்ன ஆடைகள் அணியக்கூடாது?
- உடலுக்கு இறுக்கமான ஜீன்ஸ், லெக்கீன்ஸ் மற்றும் இறுக்கமான பேண்ட்களை கோடைக்காலத்தில் அணிவதை தவிர்ப்பது நல்லது.
- கோடைக்காலம் நைலான் மற்றும் பாலிஸ்டர் ஆடைகள் அணியவே கூடாது.
- பாலிஸ்டர் ஆடைகள் அணிந்தால், அவை வெயிலின் தாக்கத்தை அதிகப்படுத்தி உடலை பாதிக்கும்.
- கோடை காலத்தில் இறுக்கமாக ஆடைகள் அணியக்கூடாது.
- கோடை காலத்தில் தோல் ஆடைகள், சாட்பீன் போன்ற உறுத்தும் ஆடைகளை அணிதல் கூடாது.
- கருப்பு மற்றும் பிற பிரகாசமான நிறங்கள் கொண்ட ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றுக்கு வெப்பத்தை கிரகிக்கும் தன்மை அதிகமாக உள்ளதால் அவைகளை தவிர்க்க வேண்டும்.
ALSO READ | வெயில் காலத்தில் சருமம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமா..? பீட்ரூட் இருந்தாலே போதும்..!