Thursday, June 1, 2023
HomeLifestyleசுட்டெரிக்கும் கோடை காலம்.. என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?

சுட்டெரிக்கும் கோடை காலம்.. என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?

ஒவ்வொரு பருவ காலத்திற்கும் நம் உடல் பல்வேறு சிக்கல்களை சந்திக்கும் அபாயம் உள்ளது. பருவகாலம் மாறும்போது சீதோஷ்ண நிலை மாறுவதால் நாம் உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும். குறிப்பாக, குளிர்காலத்தில் இருந்து கோடை காலத்திற்கு மாறும்போது நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் மிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால், கோடை காலத்தில் வெயில் வாட்டி வதைக்கும். அதுபோன்ற நேரங்களில் நாம் சாப்பிடும் திட மற்றும் திரவ உணவுகளில் மிகுந்த கவனம் வேண்டும்.

கோடை காலத்தில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?: என்பதை கீழே காணலாம்.

  • கோடை காலத்தில் வெளியே வெயிலில் செல்லும் போது சன் ஸ்க்ரீன் போடாமல் அல்லது பாதுகாப்பான ஆடைகளை அணியாமல் வெயிலில் செல்வதை தவிர்ப்பது நல்லது.
  • வெயில் வாட்டி வதைக்கும் காலம் கோடை காலம் என்பதால் வீணாக வெயிலில் அலைவது சருமத்தை மோசமாக பாதிக்கும். மேலும், உங்கள் நிறத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • கோடை காலத்தில் அதிகளவில் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
  • கோடை காலத்தில் மது அருந்துவதால் உடல் வறட்சி ஆகும் வாய்ப்பு அதிகம்.
  • கோடை காலத்தில் எப்போதும் பருத்தியால் செய்யப்பட்ட ஆடைகளை அணிவதுதான் மிகவும் நல்லது ஆகும்.
  • கோடை காலத்தில் வெளியில் செல்லும்போது அடர் வண்ணங்களான ஆடைகள், மிகவும் இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்பப்து நல்லது ஆகும். இதுபோன்ற ஆடைகள் வெப்பத்தை தக்கவைத்து, உடல் சூடு பிரச்சனையை அதிகரிக்கும்.
  • கோடைக்காலத்தில் எங்கு வெளியே சென்றாலும் நீர் கொண்டு செல்ல எப்போதும் மறக்க வேண்டாம்.
  • கோடை காலத்தில் வெளியில் செல்லும்போது அதிகளவில் வியர்க்கும். இதனால், உடலில் நீர் குறையும். இதனால். மற்ற காலங்களை விட கோடையில் அதிகளவு நீரைக் குடிக்க வேண்டும்.
  • வயிறு நிறைய, கொழுப்பு அதிகமான உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது.
    கோடை காலத்தில் கொழுப்பு மற்றும் சூடான உணவுகளை சாப்பிடுவதால் உடல் வெப்பம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இது உடலில் மந்தத்தை அதிகரிக்கும்.
  • வெளியே வெயிலில் செல்லும் போது தொப்பி, சன் ஸ்க்ரீன் கண்ணாடி போன்றவற்றை அணிய தவறக்கூடாது.
  • வெயிலில் அதிகம் சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். அவசியம் இருந்தால் மட்டும் தான், வெளியே செல்ல வேண்டும்.
  • வெயில் காலத்தில் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை தேவையின்றி வெளியில் அழைத்துச் சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.

கோடை காலத்தில் அதிகளவு வெயில்களில் சுற்றுவதை தவிர்பப்து எப்போதும் நல்லது ஆகும்.

ALSO READ | காய்ச்சலின்போது என்னவெல்லாம் சாப்பிட வேண்டும்? இதை படிங்க!