என்னதான் இரவு, பகலாக உழைத்தாலும் உங்கள் வீட்டில் பணம் தங்கவில்லையா? லட்சுமிதேவி உங்கள் வீட்டில் எப்போதும் நீடித்திருக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்.
தொழில்புரிவோர் தாங்கள் தொழில் செய்யும் இடத்தில் தினமும் தொழிலை ஆரம்பிக்கும் முன்பு கடவுளுக்கு ஊதுபத்தியை ஏற்றுவதன் மூலம் பணவரவு உண்டாகும்.
- வீட்டில் பணம் தங்குவதற்கு அரிசி மற்றும் மாவு வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் 5 துளசி மற்றும் 2 குங்குமப்பூ போன்றவை வைக்கவும். இதை ஞாயிற்றுக்கிழமைகளில் செய்தால் வீட்டில் பணம் அதிகரிக்கும்.
- இலவங்கப்பட்டையை நம் பணப்பெட்டியில் வைத்து வர பண வரவு அதிகரிக்கும். இலவங்கப்பட்டையும் பண வரவை ஈர்க்கும் ஒரு பொருளாக விளங்குகிறது.
- வெளியில் செல்லும்போது எப்போதும் ஒரு 100 ரூபாயாவது சட்டை பையிலோ அல்லது பர்சிலோ வைத்திருக்க வேண்டும். வியாபாரிகள் கண்டிப்பாக இதை கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால் பணத்தை ஈர்க்கும் சக்தி பணத்திற்கு தான் உண்டு.
- வீட்டின் பின்புறம் கற்றாழை செடி வளர்த்தால், வீட்டில் நிதி நிலைமை அமோகமாக இருக்கும்.
- பர்ஸ், பணப்பெட்டி எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும். சுத்தமான இடத்தில் தான் லட்சுமி எப்போதும் தங்க விரும்புவாள்.
- பணப்பெட்டியில் பணத்தை வைக்கும் முன்பு மகாலட்சுமியை மனதார நினைத்து அதிகம் பணம் சேர வேண்டும் என வேண்டிக்கொண்டு பணத்தை வைக்க வேண்டும்.
- பெண்கள் சமையலறை டப்பாவில் பணத்தை சேமிப்பர். அவர்களுக்கும் இது பொருந்தும்.
- பச்சை கற்பூரம், சோம்பு, ஏலக்காய் இவை மூன்றையும் ஒரு மஞ்சள் துணியில் மூட்டையாக கட்டி குபேர மூலையில் வைத்து தீபம் காட்டி பூஜித்து வந்தால் வீட்டில் எப்போதும் பணம் இருக்கும்.
வீட்டில் அத்தியாவசிய பொருட்களான உப்பு, பருப்பு போன்றவை எப்பொழுதும் குறையாமல் இருக்க வேண்டும்.
இந்த சம்பிரதாய முறைகளை நாம் முறையாக கடைபிடித்து வந்தால் லட்சுமிதேவி நமது வீட்டில் குடி கொள்வாள்.
ALSO READ | மக்களே… நகைகளை வாங்கும்போது கவனிக்க வேண்டியது என்னென்ன?