மனித இனத்தின் வளர்ச்சிக்கும் மனிதனின் ஆரோக்கியத்திற்கும் உடலுறவு என்பது மிகவும் அவசியம் ஆகும். உடலுறவு என்பது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கக்கூடிய விஷயம் என்றாலும், அதில் நாம் செய்யும் சில தவறுகள் நமது ஆரோக்கியத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும். அதனால். உடலுறவை பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும். எப்போது எல்லாம் உடலுறவு கொள்ளக்கூடாது.
ஆணுறை இல்லாத நேரம்:
குழந்தை பயம் இல்லாமல் தம்பதிகள் உடலுறவு கொள்ள காண்டம் பயன்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம் ஆகும். இதனால் காண்டம் போன்ற பாதுகாப்பு சாதனங்கள் உங்களிடம் இல்லையென்றால், உடலுறவு கொள்ளாதீர்கள். ஆணுறைகள் தேவையற்ற கர்ப்பத்திலிருந்து உங்களைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், பாதுகாப்பற்ற உடலுறவின் முக்கிய ஆபத்துகளான பாலியல் பரவும் நோய்களில் இருந்தும் நம்மை காப்பாற்றும்.
குழந்தை பிறந்த உடனே:
குழந்தை பிறந்த உடனே உடலுறவு கொள்ளக்கூடாது. இது பெண்ணின் ஆரோக்கியத்திற்கு மிகுந்த சிக்கலை ஏற்படுத்தும். குழந்தை பிறந்த பிறகு உடலுறவு கொள்வதற்கு சிறிது காலம் காத்திருப்பது நல்லது. குழந்தை பிறந்து ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் வரை காத்திருக்குமாறு பல மருத்துவர்கள் அறிவுறுத்தினாலும், சரியான இடைவெளியை தெரிந்து கொள்ள உங்கள் மருத்துவருடன் ஆலோசிப்பது நல்லது. பிரசவத்திற்கும், உடலுறவிற்கும் இடையில் இடைவெளி வைத்திருப்பது உங்கள் உடல் பிரசவத்திலிருந்து மீள உதவுகிறது.
அந்தரங்க பகுதியில் ஷேவ்:
நமது பிறப்புறுப்புகளில் வளரும் முடிகளை அவ்வப்போது சுத்தம் செய்துவிடுவது நல்லது ஆகும். அதுபோன்று அந்தரங்க பகுதியில் ஷேவ் செய்தவுடன் உடலுறவு கொள்ளக்கூடாது. அந்தரங்க பகுதியில் முடியை அகற்றிய பிறகு உடனடியாக உடலுறவு கொள்வது, வேக்சிங் செயல்முறையின் போது ஏற்கனவே தேய்ந்து போன பிறப்புறுப்புகளைச் சுற்றியுள்ள உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். அந்தரங்க பகுதியில் வேக்சிங் செய்தபின் ஒரு நாளாவது உடலுறவிற்கு காத்திருக்க வேண்டும்.
சிகிச்சை:
UTI சிகிச்சை எடுத்துக்கொள்ளும் போது உடலுறவு கொள்ளக்கூடாது. சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் பொதுவாக பெண்களிடம் காணப்படுகின்றன. உங்களுக்கு சமீபத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதிலிருந்து மீண்டிருந்தாலோ அல்லது சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தாலோ, உங்களுக்கு தொற்று இல்லை என்று உங்களுக்குத் தோன்றினாலும், இன்னும் சில நாட்களுக்கு உடலுறவை நிறுத்தி வைப்பது நல்லது. உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்தப் பிறகே உடலுறவு கொள்ள வேண்டும்.
கர்ப்பகாலம்:
கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வதில் மருத்துவரீதியாக எந்த தவறும் இல்லை; இந்த காலகட்டத்தில் பல தம்பதிகள் உடலுறவு கொள்கிறார்கள். இருப்பினும், கருப்பை வாய், நஞ்சுக்கொடி, பாலியல்ரீதியாக பரவும் நோய்களின் வரலாறு போன்ற பல காரணங்கள் கருவுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே இது குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
மேலே கூறிய காலத்தில் உடலுறவு மேற்கொள்வதை தவிர்த்துவிடுவது நல்லது ஆகும்.
ALSO READ | கோடை காலத்தில் செய்ய வேண்டியது என்ன..? செய்யக்கூடாதது என்னென்ன?