ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பது பொருள் தேடி ஓடும் இன்றைய காலகட்டத்தில் அழிந்து வருகிறது என்றே கூறலாம். குறிப்பாக, இப்போது கடைகளில் சாப்பிடும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளளது. வேலைக்காக, கல்விக்காக குடும்பங்களை விட்டு வெளியே தங்கியிருக்கும் இளைஞர்கள், பெண்கள், ஆண்கள் கடைகளில் வேறு வழியின்றி சாப்பிடுகிறார்கள். பெருநகரங்களில் குடும்பங்களில் இருப்பவர்களும் வாரத்திற்கு ஒரு முறை கடைகளில் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.இது உடல்நலத்தில் மிகப்பெரும் தீங்கை ஏற்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
தொடர்ந்து கடைகளில் சாப்பிடும்போது அதாவது ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதால் என்னென்ன சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று தெரியுமா..?
கடைகளில் உணவின் சுவைக்காகவும், வாசனைக்காகவும் மசாலா பொருட்களை அதிகளவில் சேர்க்கிறார்கள். அளவுக்கு அதிகமாக மசாலா பொருட்கள் சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் செரிமான பிரச்சனை, வயிற்றுப்போக்கு மற்றும் குடல் புண் ஏற்படும் அபாயம் உள்ளது.
- கடைகளில் ஜூஸ் குடிப்பதை பெருமளவும் தவிர்த்து விடுங்கள். அதற்கு பதிலாக முடிந்தளவு வீட்டிலேயே தயார் செய்து குடியுங்கள். கடைகளில் தயாரிக்கப்படும் ஜூஸ்களில் நிறைவூட்டப்பட்ட சர்க்கரை சேர்க்கப்படுகிறது. இது உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டது.
- இன்று பெரும்பாலானவர்களின் தவிர்க்க முடியாத உணவாக ப்ரைடு ரைஸ் உள்ளது. பிரைடு ரைஸ், நூடுல்ஸ் போன்றவற்றை குழந்தைகளுக்கு அடிக்கடி வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அதிக மசாலாக்கள் நிறைந்த அந்த உணவுகள் குழந்தைகள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் அபாயம் உள்ளது.
- கடைகளில் விற்கப்படும் நொறுக்குத் தீனிகளான சிப்ஸ் போன்றவற்றையும் தொடர்ந்து குழந்தைகளுக்கு அளித்து பழக்கக்கூடாது. இது குழந்தையின் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய பிரச்சனை ஏற்படும்.
- பெரும்பாலும் கடைகளில் தயார் செய்யப்படும் உணவுகளில் ஊட்டச்சத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாது. சுவைக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். இதுவே ஆரோக்கியத்தை பாதிக்கும் தன்மை கொண்டது.
- முடிந்தவரை கடைகளில், வெளியில் சாப்பிடுவதை தவிர்த்து வீட்டிலே சமைத்து சாப்பிடுவது நல்லது ஆகும். கடைகளிலே சாப்பிடுபவர்கள் வீடுகளில் சாப்பிடும்போது அதன் வித்தியாசத்தை நன்றாக உணர்ந்தவர்களாக இருப்பார்கள். இதனால், குழந்தைகளின் ஆரோக்கியத்திலும், பெரியவர்களின் ஆரோக்கியத்திலும் தேவையற்ற அஜாக்கிரதையை தவிர்க்க வேண்டும்.
ALSO READ | ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்..! பாதுகாப்பாக மீண்டும் பயன்படுத்துவது எப்படி?