Thursday, June 1, 2023
HomeLifestyleதித்திக்கும் கரும்பு பாயாசம் சாப்பிட்டு பாருங்க... டேஸ்ட்ல அசந்து போயிடுவீங்க...?

தித்திக்கும் கரும்பு பாயாசம் சாப்பிட்டு பாருங்க… டேஸ்ட்ல அசந்து போயிடுவீங்க…?

பொங்கல் பண்டிகைக்கு வாங்கிய கரும்பு இன்னும் பலரது வீடுகளிலும் தீராமல் இருக்கும். கரும்பை எப்படி சாப்பிட்டாலும் அது நமக்கு தித்திப்பையே தரும். கரும்பை வைத்து கரும்பு பாயாசம் செய்து அசத்துங்கள்.

கரும்பு பாயசமானது ஒரு தனித்துவமான இனிப்பு. இதை தயாரிக்க சர்க்கரையோ அல்லது வெல்லமோ தேவையில்லை. இயற்கையாக கரும்பு சாற்றில் உள்ள இனிப்பே இதற்கு பயன்படுத்தப்படுகிறது. இனிப்பு பண்டங்கள் மீது அதிக ஈர்ப்பு உள்ள மக்களுக்கு கரும்பு பாயாசம் சரியான தேர்வாகும்.

இதை செய்வதும் அவ்வளவு கடினமான காரியமில்லை. மிக எளிதாகவே கரும்பு பாயாசத்தை செய்ய முடியும். இதில் அரிசி போன்ற மென்மையான பொருட்களை கலப்பதன் மூலம் இதன் சுவை மற்ற பாயாசங்களை காட்டிலும் சுவையாகவும் ஆரோக்கியமானதாகவும் உள்ளது. இது கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். அதை எப்படி செய்வது என்பதை கீழே காணலாம்.

தேவையான பொருட்கள்

கரும்பு ஜீஸ் – அரை லிட்டர்
அரிசி – ¼ கப்
நெய் – தேக்கரண்டி
முந்திரி – 1 கைப்பிடியளவு
பால் – தேவையான அளவு

செய்முறை:

• முதலில் ஒரு கடாயை எடுத்து அதில் நெய்யை விட்டு நெய் சூடானதும் முந்திரி சேர்த்து வறுக்கவும்.
• முந்திரி பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.
• முந்திரி பொன்னிறமானதும் அதை கடாயில் இருந்து தனியாக எடுத்து வைத்துவிட்டு கடாயில் தயாராக வைத்துள்ள கரும்பு சாறை ஊற்றவும்.
• பிறகு கரும்பு சாறை கொதிக்க விடவும். கரும்பு சாறு கொதிக்கும் போது அதனுடன் பாலை சேர்க்கவும்.
• கரும்பு சாறு கலவையில் தயாராக வைத்துள்ள அரிசியை சேர்க்கவும்.
• அரிசி மென்மையாக மாறும் வரை 15 நிமிடங்கள் அல்லது அதற்கு மேலாக அரிசியை சமைக்கவும்.
• அதன் பிறகு முழுமையாக வெந்ததும் அதில் உலர்ந்த பழங்களை சேர்த்து கிளறி கொள்ளவும்.
• இப்போது இனிப்பான கரும்பு பாயாசம் தயார்.

இந்த கரும்பு பாயாசமானது உடலுக்கு அதிக குளுக்கோஸ் சக்தியை அளிக்கும். இதில் இனிப்பு அதிகளவில் இருக்கும் என்பதால் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இதை சாப்பிடலாமா..? இல்லையா..? என்பதை மருத்துவர்களில் ஆலோசித்து சாப்பிட வேண்டும். இந்த இனிப்பான கரும்பு பாயாசத்தை வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.