Tuesday, March 28, 2023
HomeLifestyleHealthகொரோனாவைரஸ் பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் மூன்று வாரங்கள் உயிர்வாழ முடியும்- ஷாக் கொடுக்கும் ஆய்வு முடிவு!

கொரோனாவைரஸ் பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் மூன்று வாரங்கள் உயிர்வாழ முடியும்- ஷாக் கொடுக்கும் ஆய்வு முடிவு!

சிக்கன், மீன் மற்றும் பன்றி கறி உள்ளிட்டவைகளில் கொரோனாவைரஸ் நீண்ட காலம் வீரியம் குறையாமல் இருப்பது சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டு இருக்கிறது. மேலே குறிப்பிடப்பட்ட இறைச்சி வகைகளை குளிர்சாதன பெட்டி அல்லது உறைய வைக்கப்பட்டாலும் வைரஸ் அளவுகளில் துளியும் மாற்றம் ஏற்படவில்லை.

சர்வதேச உணவு வரத்தக நிலைகளில் உணவு வகைகள் வைக்கப்படும் வெப்பநிலை, போக்குவரத்து முறை மற்றும் பதப்படுத்தும் நிலைகளுக்கு ஏற்ப கொரோனாவைரஸ் தன்னை மாற்றிக் கொள்ளும் என சிங்கப்பூரை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருந்தனர்.

சமீபத்தில் பதப்படுத்தப்பட்ட சிக்கன் மற்றும் இறால் உள்ளிட்டவைகளின் பேக்கேஜிங் பொருட்களில் கொரோனாவைரஸ் இருந்ததாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. இவற்றை சீனாவும் உறுதிப்படுத்தி இருந்தது. இதுபற்றிய தகவல்கள் முரணாக இருக்கின்றன.

Also Read: பீர் குடிப்பது உடலுக்கு சாதகமா , பாதகமா ?

எனினும், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருந்து கொரோனாவைரஸ் பரவும் என அதிகம் நம்பப்படுகிறது. முந்தைய ஆய்வுகளில் பித்தலை மேற்பரப்புகளில் கொரோனாவைரஸ் நான்கு மணி நேரத்திற்கு பிறகும், கார்டுபோர்டுகளில் 24 மணி நேரத்திற்கு பின்பும், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் பிளாஸ்டிக் பரப்புகளில் மூன்று முதல் 21 நாட்களுக்கு பின் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

வழக்கமான உணவு பாதுகாப்பு முறைகள் தற்சமயம் ஆபத்தானவையாக மாறி இருக்கிறது என சமீபத்திய ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.