இந்திய மக்கள் தொகையில் 80 சதவீதம் பேருக்கு வைட்டமின் டி குறைபாடு இருக்கிறது. இது உடல் பாகங்கள் சீராக இயங்க முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் போதுமான அளவு வைட்டமின் டி இல்லையெனில் எலும்புகளின் பலம் குறைந்து, உடல் வலி ஏற்படும். மேலும் இது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்.
இதன் காரணமாக மன அழுத்தம் கூட ஏற்படலாம். இந்த குறைபாடு கொரோனாவை எதிர்க்க எந்த அளவு பங்கு வகிக்கிறது என தெரியுமா?
கொரோனாவைரஸ் மற்றும் உடலில் உள்ள வைட்டமின் டி அளவுகளுக்கும் மறைமுக தொடர்பு உண்டு. பல்வேறு ஆய்வுகளில் கொரோனாவைரஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில், தற்போதைய காலக்கட்டத்தில் உடலில் போதுமான அளவு வைட்டமின் டி இருப்பது மிகவும் அவசியம் ஆகும். பெரும்பாலானோர் வீட்டில் இருந்தபடி வேலை செய்வதால், பலரது உடல் சூரிய வெளிச்சத்தை உள்வாங்கும் வாய்ப்பு குறைந்துவிடுகிறது. சூரிய வெளிச்சத்தில் இருந்து அதிகளவு விட்டமின் டி பெற முடியும்.
கொரோனாவைரஸ் பாதிப்புக்கு வைட்டமின் டி சிறந்த மருத்துவமாக இருக்கிறது. எனினும், இந்த விட்டமின் மட்டும் போதுமானதாக இருக்கிறது. வைட்டமின் சி – ஆன்டி வைரல் அல்லது ஸ்டெராய்டுகளுக்கு இணையாக வைட்டமின் டி மிக முக்கியமான ஒன்று ஆகும்.
எந்த காலக்கட்டத்திலும் சராசரியாக ஒருவரது உடலில் நாள் ஒன்றுக்கு 2000 யூனிட்கள் வைட்டமின் டி அவசியமாக இருக்க வேண்டும். இது நம் உடலை எந்த தொற்றிலும் இருந்து பாதுகாக்கும்.