Tuesday, May 23, 2023
HomeLifestyleஎந்த மாதிரி கனவுக்கு என்னென்ன அர்த்தம் தெரியுமா..? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!

எந்த மாதிரி கனவுக்கு என்னென்ன அர்த்தம் தெரியுமா..? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!

கனவிற்கும், மனிதனின் வாழ்விற்கும் ஏராளமான தொடர்புகள் உள்ளது என்று அறிவியல்பூர்வமாகவே பல ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது. இன்றும் கனவுகள் தொடர்பாக பல ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தூக்கத்தில் வரும் கனவுலகம் என்பது ஒரு வித தனி சுகம் என்றும் கூட கூறலாம். பலமுறை இந்த கனவு ஏன் வந்தது? இந்த கனவு ஏன் கலைந்தது? என்றெல்லாம் நாம் நினைத்திருப்போம்.
அதுபோல. நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஜோதிடத்தில் ஒரு அர்த்தம் உண்டு. அவ்வாறு வரும் கனவுகளுக்கான பலன்களை கீழே காணலாம்.

கார் வாங்குவது போல் கனவு:

உங்கள் கனவில் நீங்கள் புதியதாக கார் வாங்குவது போல கனவு கண்டால் உங்களின் புதிய முயற்சிகள் விரைவில் கைகூடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
மேலே இருந்து விழுவது போல் கனவு:
உயரமான கட்டிடங்களில் இருந்து அல்லது மேலே இருந்து கீழே விழுவது போல கனவு கண்டால் பணி நிமிர்த்தமான செயல்களில் சிந்தித்து செயல்பட வேண்டும். கவனமாக செயல்பட வேண்டும்.

யானை மீது செல்வது போல் கனவு:

உங்கள் கனவில் நீங்கள் யானை மீது அமர்ந்து செல்வது போல கனவு கண்டால் உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

உயரமான மரத்தில் அதிக பழம் இருப்பது போல் கனவு:

உயரமாக உள்ள மரத்தில் அதிக பழங்கள் காய்த்து தொங்குவது போல கனவு கண்டால் முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

பெண் துரத்துவது போல் கனவு:

உங்கள் கனவில் உங்களை ஒரு பெண் துரத்துவது போல கனவு கண்டால் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நேரிடும்.

யானை தடையாக இருப்பது போல் கனவு:

நீங்கள் செல்லும் பாதையில் யானை தடையாக இருப்பது போல கனவு கண்டால் எண்ணிய சில பணிகளில் எதிர்பாராத தடைகள் மூலம் விரயமும், தாமதமும் உண்டாக வாய்ப்புள்ளது என்று அர்த்தம்.

பறவையின் மீது பறப்பது போல் கனவு:

பெரிய பறவையின் மீது அமர்ந்து பறப்பது போல கனவு கண்டால் உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

நாய் துரத்துவது போல் கனவு:

உங்கள் கனவில் உங்களை ஒரு நாய் துரத்துவது போல் கனவு கண்டால் ஆசைகளினால் சிக்கல்கள் ஏற்படும் என்று அர்த்தம்.

தேர்வு எழுதுவது போல் கனவு:

உங்கள் கனவில் தேர்வு எழுதுவது போல் கனவு கண்டால் எதிலும் ஆர்வம் இல்லாமல் இருப்பதைக் குறிக்கிறது.

காதலி துரோகம் செய்வது போல் கனவு:

உங்கள் காதலி உங்களுக்கு துரோகம் செய்வது போல கனவு கண்டால் நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசாமல் குழப்பத்துடன் இருப்பதைக் குறிக்கிறது.

பலூனில் பறப்பது போல் கனவு:

உங்கள் கனவில் நீங்கள் பலூனில் பறப்பது போல் கனவு கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.

சிங்கம் துரத்துவது போல் கனவு:

சிங்கம் துரத்துவது போல் கனவு கண்டால் கோபத்தினால் சில இழப்புகள் நேரிடும் அபாயம் உள்ளது என்று அர்த்தம்.

நாய் கடிப்பது போல் கனவு:

நாய் கடிப்பது போல கனவு கண்டால் நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் விரைவில் ஏற்படும் என்பதை குறிக்கிறது.

நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒருவித அர்த்தங்கள் உள்ளது. அதேசமயம் கனவுகளையே நினைத்து கவலை கொள்ளாமல் வழக்கம்போல நமது பணிகளை கவனத்துடன் செய்வதே சிறந்தது.

ALSO READ | கன்னத்துல கை வைச்சா உண்மையில கப்பல் கவிழ்ந்துடுமா?