ஒரு மனிதன் உயிர்வாழ்வதற்கு மிக மிக அவசியம் சுவாசித்தல் ஆகும். சுவாசம் நின்றால் உயிரே நின்று விடும். நமது உடலில் உள்ள மூக்கு சுவாசித்தலுக்கான உறுப்பு ஆகும். மூக்கு மட்டுமின்றி வாய் வழியாகவும் நாம் சுவாசிக்கிறோம்.
வாய்வழி சுவாசம்
வாய்வழி சுவாசம் என்பது மூக்கு வழி சுவாசம் அளவிற்கு ஆரோக்கியமானது அல்ல. ஒருவருடைய மூக்கின் துளைகள் அடைபடும் போது, வாய்வழி சுவாசம் தொடங்குகிறது. அதன் மூலம், உடலானது வாய் வழியாக ஆக்ஸிஜனைப் பெறத் தொடங்குகிறது. மூக்கின் துளைகளானது மூக்கின் நடுச்சுவா் விலகல், மூக்கின் குருத்தெலும்பில் குறைபாடு, சளி அல்லது அலா்ஜியால் மூக்கு அடைபடுதல், தூக்கத்தில் மூச்சுத் திணறல் அல்லது நாசித் திசுக்களில் ஏற்படும் வீக்கம் போன்றவற்றால் அடைபடுகின்றன. வாய் வழியாக மூச்சை விட்டு தூங்குவது என்பது, மூச்சுக் குழாய் அடைப்பைக் குறிக்கிறது.
இதன்காரணமாக, பலரும் இரவு நேரங்களில் வாயை திறந்தவாறு தூங்குகின்றனர். அவ்வாறு வாயை திறந்தவாறு தூங்குவது ஆரோக்கியமற்றது ஆகும். தூக்கத்தில் நடக்கும் விஷயத்திற்கு நாம் பொறுப்பல்ல என்றாலும், வாயை திறந்துவைத்து தூங்குவதால் பல ஆரோக்கிய சீர்கேடுகளை சந்திக்க நேரிடுகிறது.
வாய் வழியில் சுவாசம் செய்வதை எவ்வாறு தவிர்ப்பது?
வாய்வழி சுவாசத்தைத் தவிா்க்க அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளலாம். எனினும் பின்வரும் குறிப்புகளைப் பின்பற்றலாம்.
தூங்கும் போது எப்போதும் மல்லாந்து தூங்க வேண்டும். முகங்குப்புற படுத்து தூங்கக்கூடாது அலா்ஜி ஏற்படுத்தாத வகையில் சுற்றுபுறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மருத்துவாின் ஆலோசனைகளைக் கேட்டு, அலா்ஜிக்கான மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
காற்றை சுத்தப்படுத்தும் ஃபில்டா்களை படுக்கை அறைகளில் வைக்கலாம். அவை அலா்ஜியால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு, வாய்வழி சுவாசத்தை நிறுத்தும். பகல் நேரங்களில் சுவாசப் பயிற்சி மற்றும் தியானம் போன்றவற்றில் ஈடுபடலாம்.
இறுதியாக, மூக்கு வழியாக சுவாசிக்கும் போது, ஆக்ஸிஜன் உள்ளிழுக்கப்பட்டு, உடலில் உள்ள கழிவுகள் மற்றும் காா்பன்-டை ஆக்ஸைடு போன்றவை வெளியேற்றப்படுகின்றன. இதை நாம் முதலில் தொிந்து வைத்திருக்க வேண்டும். ஆகவே ஒருவருக்கு வாய்வழியாக மூச்சுவிடும் பழக்கம் இருப்பது தொிந்தால், உடனே மருத்துவரை அணுகி முறையாக சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்
ALSO READ | காய்ச்சலின்போது என்னவெல்லாம் சாப்பிட வேண்டும்? இதை படிங்க!