நாம் வாழும் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ நாம் எப்போதும் சில விஷயங்களை தேர்வு செய்வதில் மட்டும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதில் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்று காதல் திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் காதலித்து திருமணம் செய்தவர்களும் சரி, பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து வைப்பவர்களும் சரி பிரிந்து செல்வது என்பதும் அதிகரித்து வருகிறது
காதலர்கள் தங்களது துணையிடம் கீழ்க்காணும் சில விஷயங்கள் இருந்தால் அந்த காதலை முறித்துக்கொள்வது அவர்களது எதிர்காலத்திற்கு எவ்வளவோ நன்மைகளை அளிக்கும். கீழ்க்காணும் சில அறிகுறிகள் உங்கள் காதலர்களிடம் இருந்தால் தயவு செய்து அவர்களை விட்டு விலகிவிடுங்கள்.
அதீத கோபம், ஆக்ரோஷம்
எப்போதும் சண்டை ஏற்பட்டுக் கொண்டே இருப்பது. சின்னஞ்சிறு சண்டைகளுக்கு எல்லாம் உங்கள் காதலர் உங்கள் மீது அதீத கோபமாகவும், ஆக்ரோஷமாகவும் இருப்பது உங்களுக்குள் சிக்கலை ஏற்படுத்தும். இது ஆரோக்கியமானது அல்ல, இது உங்கள் மன ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும்.
முன்னாள் காதலை குறைகூறுவது
உங்கள் காதலர் உங்களுக்கு முன் வேறு யாரையாவது விரும்பி இருந்தால், உங்களுடன் தற்போது உறவில் இருக்கும்போது கூட எப்போதும் தனது முன்னாள் காதலனையோ அல்லது காதலியையோ பற்றி புகார் செய்வதாகத் தோன்றினால், அவர் தன் மீதான தவறை உணர மறுப்பதுடன் தன்னுடைய முன்னாள் துணை மீதே தவறுகளை சுமத்த விரும்புகிறார் என்று அர்த்தம். இந்த நிலை உங்களுக்கும் நிகழ வாய்ப்புள்ளது.
பெற்றோரை மதிக்காதவர்
உங்கள் காதலர் உங்களுக்கு மட்டுமின்றி உங்கள் பெற்றோர்களுக்கும் மதிப்பளிப்பவராக இருக்க வேண்டும்., இல்லாவிட்டால் வீண் சிக்கல்களும், பிரச்சினைகளும் நிகழ வாய்ப்புள்ளது. உங்கள் பெற்றோர்களை உங்களது துணை மதிப்பளிக்க தவறினால், அவமரியாதையாக நடத்தினால் நிச்சயம் அது நிம்மதியை கெடுக்கும் செயல், அப்படிப்பட உறவை உடனே முறித்துக் கொள்வது நல்லது.
சந்தேகம்
இன்றைய காலத்தில் அதீத அன்பு அதாவது பொசெஸிவ்னெஸ் என்பதை காதலர்கள் தங்களுக்குள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், இதே அதீத அன்பு சந்தேகத்திற்கான வழிகாட்டியாக சில நேரங்களில் மாறிவிடுகிறது. இதை சரியாக கையாள வேண்டும். உங்கள் காதலர் உங்கள் மீது சந்தேகப்பார்வை கொள்பவராக இருந்தால். உங்களுக்கே தெரியாமல் உங்களை கண்காணிப்பவராக இருந்தால் நீங்கள் நிச்சயம் அந்த உறவை முறித்துக் கொள்வது உங்கள் எதிர்காலத்திற்கும், நிம்மதிக்கும் நல்லது.