சரும பராமரிப்பில் நாம் அனைவரும் மிகவும் அக்கறையாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். அதுவும் உடலில் வெளியில் தெரியும் பாகங்களில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் நம் மனம் மிகவும் கவலையடையும். அதில், கழுத்துப்பகுதிகளில் கருமைப் பகுதிகள் நமக்கு மிகவும் மனம் உளைச்சல் ஆகும்.
உங்களுக்கும் கழுத்திற்கு பின்னால் இருக்கும் கருமையான பகுதிகள் இருக்கிறதா…? கவலை வேண்டாம். எளிதில் சரி செய்யலாம். பல காரணங்களால் இந்த சிக்கல் ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே தீர்வுகள் உள்ளன.
மஞ்சள்
கழுத்தின் பின்பகுதியில் ஏற்படும் நிறமாற்றத்தை நீக்கி இயற்கையான பொலிவைத் தருகிறது மஞ்சள். மஞ்சளுக்கு இயற்கையாகவே ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. இரண்டு ஸ்பூன் கடலை மாவு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலவையாக்க வேண்டும். அந்த கலவையை கழுத்தில் 15 நிமிடங்கள் தடவவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் நன்கு கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு முறை வரை செய்தாலே நல்ல பலனை தரும்.
தயிர்
கழுத்தில் உள்ள கருமையைப் போக்க தயிர் உதவுகிறது. ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன் இரண்டு தேக்கரண்டி தயிர் சேர்க்கவும். இப்போது அந்த கலவையை கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து தண்ணீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து 10 நாட்கள் வரை செய்து வந்தால் உங்களுக்கே மாற்றங்கள் தெரியும்.
பாதாம் எண்ணெய்
கற்றாழை ஜெல்லை ஒரு ஸ்பூன் தயிருடன் கலந்து கழுத்தில் தடவுவதும், இந்த பிரச்னைக்கு நல்ல தீர்வை தரும். பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் ப்ளீச்சிங் ஏஜெண்டுகள் உள்ளன. இவை கரும்புள்ளிகளைப் போக்க உதவும். அதற்கு இரண்டு துளிகள் பாதாம் எண்ணெயை எடுத்து கழுத்தில் நன்றாக மசாஜ் செய்யவும். 25 நிமிடங்களுக்குப் பிறகு, உங்கள் கழுத்தை தண்ணீரில் கழுவலாம். மாதம் இருமுறை செய்தாலே நல்லம் மாற்றம் தெரியும்.
உருளை
உருளைக்கிழங்கில் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்ற உதவும் பொருட்கள் உள்ளன. அவை கரும்புள்ளிகளை நீக்கி, சருமத்திற்கு இயற்கையான பொலிவை அளிக்கும். ஒரு சிறிய உருளைக்கிழங்கை எடுத்து தோலுரித்த பின் சாறு தயார் செய்யவும். பிறகு அந்த சாற்றை கழுத்தில் தடவ வேண்டும். அது உலர்ந்ததும், வெதுவெதுப்பான நீரில் கழுவினால் போதும். தொடர்ந்து செய்து வந்தால் கருமையை எளிதில் நீக்கலாம்.
மேற்கண்ட முறைகளில் ஏதேனும் ஒரு முறையை செய்தாலே நமது உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.