Thursday, June 1, 2023
HomeLifestyleமுதல்ல இதைப் படிங்க.. உடலுறவு வைத்துக்கொள்ள பெஸ்ட் சீசன் எது..?

முதல்ல இதைப் படிங்க.. உடலுறவு வைத்துக்கொள்ள பெஸ்ட் சீசன் எது..?

மனித இனம் தழைத்தோங்குவதற்கு அடிப்படையாக உடலுறவு உள்ளது. 5ஜி தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்திலும் பட்டம் பயி்ன்ற பலருக்குமே உடலுறவு பற்றிய புரிதல் இல்லை என்றே சொல்லலாம். ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது பாரம்பரிய வைத்திய முறைகளில் உடலுறவு பற்றி விளக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்று ஆயுர்வேதம். இதில், உடலுறவு பற்றி விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், எந்தெந்த கால சூழ்நிலையில் எத்தனை முறை உடலுறவு கொள்ள வேண்டும் என்றும் விளக்கப்பட்டுள்ளது.

ஆயுர்வேதத்தில் கூறியிருப்பதுபடி, உடலுறவு ஆயுர்வேதத்தின் சுக்ரா எனப்படும் ஏழு திசுக்களுடன் சம்மந்தப்பட்டது. சுக்ரா எனும் தாது ஆண்களின் விந்து, பெண்களின் கருமுட்டை திசுக்களுடன் தொடர்புடையது. அவை ஆரோக்கியமாக இருந்தால் உடலின் மொத்த ஆரோக்கியமும் மேம்படும் என ஆயுர்வேதம் கூறுகிறது.

உடலுறவை சரியான புரிதல் இல்லாமல் செய்தால் நமது நோய் எதிர்ப்பு அமைப்பு, முக்கிய ஆற்றல் ஓட்டத்தை ஆழமாக பாதிக்கிறது என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. குளிர்காலம் மற்றும் வசந்த காலங்களில் உடலுறவு வைப்பது சிறந்தது என ஆயுர்வேதம் கூறுகிறது. அதேசமயம் கோடையில் அதிக முறை உடலுறவு கொள்ளக்கூடாது என்றும் ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது.

கோடைக்காலத்திலும், மழைக் காலத்திலும் நமது உடலில் பித்த, வாத ஆற்றல் அதிகமாக இருக்கும். இதனால் பாலியல் செயல்பாடு குறையும். இந்த நேரங்களில் நமது உடலில் இனப்பெருக்கத்திற்கான உயிர்ச்சக்தி மிகக் குறைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதுபோன்ற தருணங்களில் உடலுறவு கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கும், நமது தாம்பத்ய வாழ்க்கைக்கும் நல்லதல்ல என்று அறிவுறுத்தப்படுகிறது.

குளிர்காலத்தில் நமது உடல் ஆரோக்கியத்தை பொறுத்து எத்தனை முறை வேண்டுமானாலும் உடலுறவில் ஈடுபடலாம் என்றும், வசந்த காலத்திலும் இலையுதிர் காலத்திலும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை உடலுறவு வைத்து கொள்ளலாம். கோடை, மழை ஆகிய காலங்களில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வைத்து கொள்ளலாம் என்றும் ஆயுர்வேதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.