Monday, March 27, 2023
HomeLifestyleHealthபீர் குடிப்பது உடலுக்கு சாதகமா , பாதகமா ?

பீர் குடிப்பது உடலுக்கு சாதகமா , பாதகமா ?

பீர் என்று சொன்னவுடன் பலருக்கு அவர்களின் அபிமான பீர் பிராண்டும் , ருசியான சைடு டிஷும் கண்முன்னே வட்டமிட தொடங்கியிருக்கும். குடிகாரர்கள் .. சாரி … மது பிரியர்கள் பல வகை உண்டு. sms படத்தில், ஒரு பாடல் வரியில் வருவது போல பீர் அடிக்க மாட்டோம்… புல் அடிக்க மாட்டோம் .. நாங்கல்லாம் குவாட்டர் தானுங்கோ என்ற வரிக்கு ஏற்றது போல குவாட்டர் மட்டும் குடிக்கும் ஒரு வகை கூட்டம் உண்டு.

அடுத்தது, மொடா குடிகாரர்கள்.. புல் பாட்டில் விஸ்கி அல்லது பிராந்தியை குடித்துவிட்டு சரியாக சாப்பிடாமல் சுயநினைவு இல்லமால் மல்லாக்க கிடக்கும் ஒரு வகையினர். வீக்கெண்டில், மச்சி லெட்ஸ் ஹாவ் ஒன் பீர் என்று கிளாசிக்காக என்ஜாய் பண்ணும் ஐடி எம்ப்ளாயீஸ் ஒரு வகை. சரி நாம் விசயத்துக்கு வருவோம். பீர் குடிப்பது உடலுக்கு நன்மை பயக்குமா? அல்லது தீமை உண்டாக்குமா? இது பற்றி விரிவாக காண்போம்.

பீர் தயாரிக்கும் முறை

பார்லி போன்ற தானியங்களில் இருந்து பெறப்பட்ட மாப்பொருளை(starch) நொதிக்கவைப்பதன் மூலம் பீர் தயாரிக்கப்படுகிறது.மேலும் ஹாப்ஸ்(hops) எனும் தாவரத்தின் பூக்களை சுவைஊட்டிகளாக பயன் படுத்தப்படுகின்றன. இதில் பிரீமியம், ஸ்டராங் என ஆல்கஹால் சதவிகிதத்தை வைத்து பீரின் வகைகள் மாறுபடும்.

Beer Health Benefits and Side Effects

பீர் நல்லதா , கெட்டதா ?

பீர் தானியங்கள் மற்றும் ஈஸ்டிலிருந்து தயாரிக்கப்படுவதால் இதில் பல்வேறு வகையான பி வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைக் கொண்டுள்ளது.

மிதமான ஆல்கஹால் சதவீதிகம் கொண்ட பீரை உட்கொள்வதால் உடலுக்கு சில நன்மைகள் ஏற்படுகின்றது. அவை என்னவென்று பார்ப்போம் .

  • ரத்தத்தில் சக்கரையின் அளவை கட்டுப்படுத்தும். அனால் அதிகப்படியாக ஆல்கஹால் சதவீதிகம் கொண்ட பீரை உட்கொள்ளும் போது எதிர்வினைகளை ஏற்படுத்துக்கூடும்.
  • ஆண்கள் மற்றும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு எலும்புகளை பலப்படுத்தும்.
  • முதுமையை கட்டுப்படுத்தும்
  • நல்ல கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும். உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் இதய நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. அனால் அதிகமாக ஆல்கஹால் கொண்ட பீரை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதுர்க்கான வாய்ப்புகள் அதிகம்.

அதிக பீர் மற்றும் ஆல்கஹால் உட்கொள்வது ஆரம்பகால மரணம், ஆல்கஹால் சார்ந்திருத்தல், மனச்சோர்வு, கல்லீரல் நோய், எடை அதிகரிப்பு மற்றும் புற்றுநோய்கள் போன்ற பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

பின் குறிப்பு: பீரின் நன்மைகளை மனதில் வைத்துக்கொண்டு, மனைவியிடம் பெர்மிஸ்ஸின் வாங்கி வீட்டிலேயே குடித்துவிடலாம் என்று நினைத்து பூரி கட்டையால் அடி வாங்கினால் கம்பெனி பொறுப்பாகாது.