ஒருவரின் வாழ்வில் மிகப்பெரிய ஏற்றத்தையும், புதிய திருப்பத்தையும் தருவது திருமணம் ஆகும். திருமணம் என்றாலே ஒருவரது முகத்தில் களையும், வெட்கமும் சேரும்போது தனி அழகுதான். குறிப்பாக, பெண்களுக்கு சொல்லவே வேண்டாம்.
அதேசமயத்தில் திருமணத்திற்காக வெளியில் அழைவது, பத்திரிகை கொடுப்பது, திருமண வேலைகள் என்று அழைவதால் சருமம் மிகவும் மோசமாக பாதிக்கப்படும். இதனால், திருமணம் நிச்சயம் ஆனது முதல் மணப்பெண்கள் தங்களது முகம் பொலிவுடன் காண கீழே உள்ளவற்றை கடைபிடிக்க வேண்டும்.
தியானம் :
- தினந்தோறும் 15 நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டும். தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்கலாம்.
- திருமண காரியத்தை தொடங்கியது முதலே பரப்பாக இயங்கத் தொடங்கி விடுவீர்கள். அதனால் மன அழுத்தம் ஏற்படலாம். எனவே தினமும் 15 நிமிடங்கள் தியானம் செய்யலாம்.
பேஷியல்:
- திருமணம் நிச்சயமான நாளில் இருந்து முகத்திற்கு ஃபேஷியல் செய்ய வேண்டும்.
- முகத்தின் பொலிவு குறையாமல் இருக்க இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சருமத்துக்கேற்ற பேஷியல் செய்ய வேண்டும்.
- வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தியும் பேஷியல் செய்யலாம்.
- வெள்ளரி, தக்காளி போன்றவற்ரை பயன்படுத்தியும் பேஷியல் செய்யலாம்.
தூக்கம் :
- உங்களின் முகம் பளபளப்பாக எப்போதும் இருக்க தூக்கம் மிகவும் அவசியம் ஆகும். நன்றாக தூங்குங்கள்.
- நன்றாக தூங்காவிட்டால் கண்களுக்கு கீழ் கருவளையம் ஏற்பட்டு, திருமண நாளில் உங்களின் அழகை குறைத்து விடும்.
உடற்பயிற்சி:
- திருமணத்திற்கு முன்பாக உடற்பயிற்சி அவசியம். இதன் மூலம் உங்களின் எடையை கட்டுக்குள் வைக்க முடியும்.
- வயிறு மற்றும் தொடைகள் போன்ற பகுதிகளில் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது அவசியமாகும்.
ஆரோக்கிய உணவு:
- உங்கள் முகம் வறண்டு போகாமல் இருக்க போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீரையும் குடிக்கலாம்.
- உணவில் காய்கறிகள், பழங்கள், சத்தான உணவுகள், புரதம் நிறைந்த உணவுகள் போன்றவற்றை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- எண்ணெயில் பொரித்த உணவு, சிப்ஸ் வகைகள், சாக்லேட்டுகள், ஐஸ்கிரீம்கள், சோடாக்கள் போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது.
- சருமத்திற்கு பொலிவை தரும் கேரட், பீட்ரூட் போன்றவற்றின் ஜூஸை குடிக்க வேண்டும்.
திருமணத்திற்கு தயாராகும் பெண்கள் மேலே கூறியவற்றை கட்டாயம் பின்பற்றி சரும பராமரிப்பை மேற்கொள்ளுங்கள்.
ALSO READ | வாட்டி வதைக்கும் வெயில்..! வீடு எப்போதும் கூலிங்கா இருக்க என்ன செய்யனும்?