Saturday, March 25, 2023
HomeLifestyleHealthபால் பாட்டில்களால் ஏற்படும் அபாயம் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

பால் பாட்டில்களால் ஏற்படும் அபாயம் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

பால் பாட்டில் மூலம் பால் குடிக்கும் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமான மைக்ரோ-பிளாஸ்டிக்களை உட்கொள்ள நேரிடுவதாக சமீபத்திய ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது நாம் உட்கொள்ளும் உணவு வகைகளில் பிளாஸ்டிக் அதிகளவு நிறைந்து இருப்பதை உணர்த்தி உள்ளது.

மனிதர்கள் ஒவ்வொரு நாளும் ஏராளமான எண்ணிக்கையில் மிக சிறிய அளவு கொண்ட பிளாஸ்டிக் துகள்களை உட்கொள்கின்றனர். இதை உறுதிப்படுத்த ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. இவை உடலில் எதுபோன்ற பாதிப்பை ஏற்படுத்தும் என்ற விவரம் மிக சிறிய அளவிலேயே தெரியவந்துள்ளது.

ஐயர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பத்து விதமான பால் பாட்டில்கள் மற்றும் பாலிபுரோபோலைன் மூலம் உருவான அக்சஸரீக்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். ஆய்வின் போது உலக சுகாதா மையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ விதிகள் முறையான பின்பற்றப்பட்டன.

21 நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் பால் பாட்டில்களில் இருந்து லிட்டருக்கு 13 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் 1.62 கோடி பிளாஸ்டிக் துகள்கள் கண்டறியப்பட்டுள்ளது. பின் தேசிய அளவில் தாய்ப்பால் கொடுப்போரின் சதவீதத்துடன் பால் பாட்டில்கள் மூலம் எவ்வளவு மைக்ரோ-பிளாஸ்டிக் துகள்கள் குழந்தைகளை சென்றடைகிறது என்ற விவரம் கணக்கிடப்பட்டது.

இதில் பிறந்த குழந்தைகள் தங்களின் முதல் 12 மாதங்களுக்குள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 16 லட்சம் பிளாஸ்டிக் துகள்களை உட்கொள்வதாக தெரிவித்து இருக்கிறது.