Tuesday, May 23, 2023
HomeLifestyleடைம் இல்லயா… அப்போ அவசரக் குழம்பை செஞ்சு அசத்துங்க! உங்களுக்காகதான்

டைம் இல்லயா… அப்போ அவசரக் குழம்பை செஞ்சு அசத்துங்க! உங்களுக்காகதான்

அனைவரது வீட்டிலும் மூன்று வேளைகளிலும் வித, விதமாய் ருசி, ருசியாய் சமைத்து சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால், அனைத்து நாட்களும் அதற்கான சூழல் அமையுமா? என்றால் நிச்சயம் இல்லை. வாரத்தில் ஏதாவது ஒருநாள் விடுமுறை தினத்தில் அசைவ உணவுகள் செய்வார். மற்ற நாட்களில் நிலைமைக்கு ஏற்றவாறு சமைப்பார்கள்.

அதுவும் சில நாட்களில் வேலைக்கு செல்லும் அவசரம் அல்லது வீட்டிற்கு யாரேனும் திடீரென விருந்தாளிகள் வந்துவிட்டால் அவசரக் குழம்பை செய்து அசத்துவார்கள். அந்த அவசரக் குழம்பை எப்படி செய்வது என்றுதான் இப்போது பார்க்கப் போகிறோம்.

தேவையான பொருட்கள்:
* உருளைக்கிழங்கு – 3 கப் அளவிற்கு நறுக்கியது
* சின்ன வெங்காயம் – 15
* தக்காளி – 2
* பூண்டு – 2 டேபிள் ஸ்பூன்
* புளி – 1 எலுமிச்சை அளவு
* உப்பு – சுவைக்கேற்ப மசாலா பொடிகள்
* மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
* சாம்பார் தூள் – 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் தாளிப்பதற்கு..
. * எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1/2 டீஸ்பூன்
* சீரகம் – 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:
* முதலில் காய்கறிகளை நீரில் கழுவி, அவற்றை துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் புளியை நீரில் ஊற வைத்து, நன்கு பிசைந்து வடிகட்டி சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும், கடுகு, சீரகம், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் காய்கறிகளைப் போட்டு, அதை தொடர்ந்து மசாலா பொடிகளைத் தூவி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, நன்கு மூடி வைத்து காய்கறிகளை வேக வைக்க வேண்டும். அவ்வப்போது மூடியைத் திறந்து காய்கறிகள் வெந்துவிட்டதா? என்பதை பார்க்க வேண்டும்.
* காய்கறிகள் நன்கு வெந்ததும், அதில் புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, மிதமான தீயில் பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான குழம்பு தயார்.

இந்த குழம்பை அவசர நேரங்களில் செய்து அசத்துங்கள்.