Monday, May 22, 2023
HomeLifestyleஉங்களுக்கான பார்ட்னரை தேர்வு செய்வதில் குழப்பமா..? அப்போ இதை பண்ணுங்க…!

உங்களுக்கான பார்ட்னரை தேர்வு செய்வதில் குழப்பமா..? அப்போ இதை பண்ணுங்க…!

உங்களுக்கான துணையை அல்லது காதலரைத் தேர்வு செய்யும் முன் உங்களுக்குள் எழும் அனைத்து விதமான சந்தேகங்களையும் தீர்த்துக்கொள்ளுங்கள். அவர் சரியானவர் என்ற திருப்தி இருந்தால் மட்டுமே ரிலேஷன்ஷிப்புக்கு ஓகே சொல்ல வேண்டும்.

தங்களுக்கு வாழ்க்கைத் துணையாக வருபவர்கள், இப்படி இருக்க வேண்டும் என்று எல்லோருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அவரை எப்படி கண்டுபிடிப்பது? என கஷ்டப்பட வேண்டாம். அவர் ஏற்கனவே உங்களுடன் பழகிக்கொண்டு இருப்பவராக அல்லது நீங்கள் அன்றாடம் பார்த்துக் கொண்டு இருப்பவராகத் தான் நிச்சயம் இருப்பார். நீங்கள் செய்ய வேண்டிய ஒன்று, அவர் நம் வாழ்க்கைத் துணையாக வருவதற்கு தகுதியானவரா? என தீர்மானிக்க வேண்டும். அதற்கு நீங்கள் இந்த பரிசோதனையை செய்யுங்கள்.

பணம் :

சில உறவுகளில் பணம் முக்கிய பங்காக இருக்கிறது. இருவரும் சேர்ந்து வாழ்வதற்கான நிதி உங்கள் பார்ட்னரிடம் இருக்கிறதா? என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அவருடன் சேர்ந்து வாழும்போது உங்களுக்கான தேவைகள் மற்றும் நிதி சார்ந்து வைத்திருக்கும் இலக்குகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வரவேண்டும். இது பற்றி நீங்கள் விரும்புபவரிடம் வெளிப்படையாக உரையாடுங்கள். ஏனென்றால், பின்னாளில் பணத்துக்காக சண்டையிட்டுக்கொள்ளக் கூடாது.

மனம் விட்டு பேச முடிகிறதா…?

இருவரும் பேசிக்கொள்ளும்போது, எந்தவித சிரமமின்றி கனெக்ட் செய்து கொள்ளக்கூடிய சூழல் இருக்கும். ஆத்மார்த்தமாக நீங்கள் பேசும்போது, நேரம் செல்வதுகூட தெரியாது. ஒளிவுமறைவின்றி அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்வீர்கள். ஒரு சில விஷயங்கள் அவருடன் மட்டுமே பகிர்ந்து கொள்வீர்கள். அவருடைய வார்த்தைகள் எப்போதும் உங்கள் பக்கம் மட்டுமே இருக்கும்

உங்கள் குடும்பம்:

நீங்கள் பார்ட்னராக தேர்தெடுக்க ஆசைப்படும் நபர் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களை, தன்னுடைய குடும்பமாக அல்லது நண்பர்களாக நினைக்கவில்லை என்றால், அந்த ரிலேஷன்ஷிப்பில் அர்த்தமில்லை. அதனால், உங்கள் குடும்ப உறுப்பினர்களை தன்னுடைய குடும்ப உறுப்பினராக நினைக்கிறாரா? என கண்டறிய வேண்டும். அதில் உங்களுக்கு வெற்றி கிடைத்தால், அவரை பார்ட்னராக தேர்ந்தெடுக்கலாம்.

உங்களை ரசிப்பவர்:

உங்கள் முகத்தில் முகப்பரு வந்தாலும், தலை முடி இல்லாமல் இருந்தாலும், பார்ட்னர் அதனை குறையாக கருதாமல் பாராட்டுபவராக இருந்தால், உண்மையில் நீங்கள் ஒரு அதிர்ஷ்டசாலி. உங்கள் அழகை பற்றி நீங்கள் வருத்தப்படும்போது அவர் மட்டும் பாராட்டும்போது, இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படும். தேவையற்ற மன அழுத்தத்தில் இருந்து வெளியே வந்ததுபோல் உணர்வீர்கள். நீங்கள் மிகவும் அழகானவர் என்ற நம்பிக்கையை கொடுப்பார்.

உங்களுக்கான முக்கியத்துவம்:

உங்களுக்கான முக்கியத்துவத்தைக் கொடுத்துக்கொண்டே இருப்பார். கடினமான வேலை இருந்தாலும், உங்களுக்காக நேரத்தை ஒதுக்கி, ஸ்பெஷலாக கவனிப்பார். அவருடைய வாழ்க்கையில் நீங்கள் முக்கியமானவராக இருக்கிறீர்கள் என்பதை உணர வைப்பவராக இருப்பார் என்றால், நிச்சயம் அவர் உங்கள் பார்ட்னராக வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.

கூடவே இருப்பார்:

உடல் நிலை சரியில்லாதபோது அனைவரும் உங்கள் மீது அக்கறை கொள்வார்கள். விரைவாக உடல்நலம் பெற வேண்டும் என வாழ்த்துவார்கள். ஆனால், நீங்கள் விரும்பும் அவர், உங்களுடனேயே இருப்பார் அல்லது இருக்க ஆசைப்படுவார்.