தமிழ்நாட்டில் வெயில் காலம் வந்தாலே அனைவரும் பேன், ஏசி போன்றவற்றை தேடி ஓட ஆரம்பித்துவிடுவோம். குளுமை எந்தளவு முக்கியமோ, அதே அளவு ஆரோக்கியத்திற்கும் குளுமை அந்தளவு முக்கியம். வெயில் காலங்களில் அதிகளவுநீர்ச்சத்து உடலில் இருந்து வெளியேறும்.
உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் வயிற்றுப் பிரச்சனைகள் முற்றிலுமாகத் தவிர்க்க உடலில் சேர்ந்துள்ள நச்சுத் தன்மைகள் மற்றும் அழுக்கை உடனே நீக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். இதனால், இந்த வெயில் காலத்தில் ஆரோக்கியமான அதேசமயம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய இயற்கை பானங்களை பருகுங்கள். அவற்றை கீழே காணலாம்.
நெல்லிக்காய் இஞ்சி பானம்
- முழு நெல்லிக்காயுடன், சிறிய துண்டு இஞ்சி மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.
- இதனுடன் எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து, வடிகட்டி தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலக் கழிவுகள் வெளியேறி விடும்.
- மேலும், வயிறு சுத்தமாவதோடு, பிற நச்சுக்களும் வெளியேறிவிடும்.
இஞ்சி தேன் பானம்
- சிறிதளவு இஞ்சியை நன்றாக அரைத்து, அதன் சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால், குடலில் தேங்கி இருக்கும் கழிவுகள் வெளியேறி விடும்.
- ஒரு சிலர் காலையில் குடிக்கும் டீயில் இஞ்சியை சேர்த்துக் கொள்வார்கள். இப்படிச் செய்வதாலும் உடல் சுத்தமாகும் .
- இஞ்சியை நீர் சேர்த்து, நன்றாக காய்ச்சி வடிகட்டிய பின், தேன் கலந்து குடித்தால் கல்லீரலில் கழிவுகள் சேராமல் இருக்கும்.
இலவங்கப்பட்டை தேன் பானம்
- இலவங்கபட்டையில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
- இந்த பானமானது உடலில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய உதவுகிறது.
- இலவங்கப்பட்டையை தேனுடன் கலந்து குடிப்பதால் உடலில் உள்ள அழுக்குகள் நீங்கி உடல் மேலும் ஆரோக்கியம் பெறும்.
கேரட் எலுமிச்சை பானம்
- கேரட்டுடன் சிறு துண்டு இஞ்சி மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளைச் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
- இதனுடன் எலுமிச்சைச் சாற்றை சேர்த்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி கொள்ள வேண்டும்.
- இதனுடன் சிறிதளவு நீர் அல்லது தேங்காய்ப் பால் சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- இந்த பானத்தை வாரத்திற்கு ஒருநாள் குடித்தாலே போதும். உடலில் தங்கி இருக்கும் நச்சுக்கள் வெளியேறி விடும்.
கோடை காலங்களில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுப்பொருட்கள் மீது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால், ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் கடினமான அசைவ உணவுகள் தேவைற்ற வயிற்றுப்பிரச்சினையை ஏற்படுத்தும். மேற்கண்ட பானங்கள் அந்த வயிற்றுப் பிரச்சினைகள சரி செய்ய உதவும்.
ALSO READ | இரவு நேரங்களில் உடற்பயிற்சி செய்யலாமா? உடலுக்கு ஆரோக்கியமா?