நம் உடலுக்கு நார்சத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. சிலவகை நார்சத்துக்கள் உடல் எடையை குறைப்பது, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகளை குறைப்பது மற்றும் மலச்சிக்கலை சரி செய்யும் தன்மை கொண்டுள்ளன.
நாள் ஒன்றுக்கு ஆயிரம் கலோரிகளுக்கு 14 கிராம் நார்சத்தை நாம் உட்கொள்வது அவசியம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். அந்த வகையில் ஆண்கள் தினமும் 24 கிராம் மற்றும் பெண்கள் 38 கிராம் வரை உட்கொள்ள வேண்டும்.
உடலில் நார்சத்தை அதிகரிப்பது சற்றே எளிய காரியம் தான். இதற்கு உணவில் நார்சத்து அதிகம் நிறைந்த பொருட்களை சேர்த்து கொள்ள வேண்டும். அப்படியாக நார்சத்து அதிகம் நிறைந்த உணவுகள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
பனங்கிழங்கு
பனங்கிழங்கில் அதிக அளவில் நார்சத்து உள்ளது. இது மலச்சிக்கலை போக்கும் வல்லமை கொண்டது, மற்றும் உடலுக்கு வலிமை சேர்க்கும். பித்தம் அதிகம் உள்ளவர்கள் பனங்கிழங்கை அளவோட சாப்பிடுவது நன்று.
பேரிக்காய்
அதிக சுவை மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பழங்களில் பேரிக்காய் மிகவும் பிரபலம். இதில் ஏராளமான நார்சத்து நிறைந்து உள்ளது.
ஆப்பிள்
வேண்டாம் என யாரும் கூற முடியாத பழமாக ஆப்பிள் விளங்குகிறது. ஆப்பிள் பற்றி ஆரோக்கிய பழமொழிகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. இதுவும் நார்சத்து அதிகம் நிறைந்த பழம் ஆகும்.
வாழைப்பழம்
வாழைப்பழங்களில் ஊட்டச்சத்து மட்டுமின்றி வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. பச்சை வாழைப்பழத்தில் உள்ள ஸ்டார்ச் நம் உடலுக்கு நார்சத்தை வழங்குகிறது.
கேரட்
சமைக்காமல் சாப்பிடக்கூடிய சத்துள்ள காய்கறி வகை கேரட். இதில் வைட்டமின் கே, வைட்டமின் பி6, மக்னீசியம், பீட்டா கரோடின் உள்ளிட்டவை நிறைந்துள்ளது. உணவில் அடிக்கடி கேரட் சேர்த்து கொண்டால் நார்சத்து தானாக அதிகரிக்கும்.
பீட்ரூட்
ஃபோலேட், இரும்பு சத்து, தாது சத்து, மங்கனீஸ் மற்றும் பொட்டாசியம் என பலவகை சத்துக்கள் நிறைந்த காய்கறி பீட்ரூட். இது நம் உடலில் இரத்த அளவுகளை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு
இனிப்பு சுவை நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கில் ஏராளமான மாவு சத்து நிறைந்துள்ளது. இதுதவிர நார்சத்து, இரும்பு சத்து, செலினியம் எனும் வைட்டமின் என ஏராளமான சத்துகள் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நிறைந்துள்ளது.
பாதாம்
பாதாம் பருப்பில் வைட்டமின் இ, மங்கனீஸ் மற்றும் மக்னீசியம் போன்ற ஆரோக்கியம் நிறைந்த கொழுப்புகள் உள்ளன. அன்றாட உணவில் சரியான அளவில் இதனை சேர்த்து கொண்டால் உடலுக்கு தேவையான நார்சத்து தானாக அதிகரிக்கும்.
பாப்கான்
பாப்கானில் அதிக நார்சத்து நிறைந்துள்ளது. படம் பார்க்கும் போதும் உடலுக்கு நார்சத்து சேர்த்து கொள்ள பாப்கான் சிறந்த தேர்வாக இருக்கும்.
சுண்டல்
அதிக ஊட்டசத்து நிறைந்த உணவாக சுண்டல் இருக்கிறது. இதுமட்டுமின்றி மினரல்கள் மற்றும் ப்ரோடீன் அதிகம் நிறைந்த உணவாக சுண்டல் இருக்கிறது.